அரசு உதவிபெறும் பள்ளிகளில் புதிய நியமனங்கள் கூடாது: ஐகோர்ட் ஐகோர்ட் உத்தரவு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, April 12, 2019

அரசு உதவிபெறும் பள்ளிகளில் புதிய நியமனங்கள் கூடாது: ஐகோர்ட் ஐகோர்ட் உத்தரவு



அரசு உதவிபெறும் பள்ளிகளில் புதிய நியமனங்கள் மேற்கொள்ளக்கூடாது என ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது. வைகுண்டம் பழைய காயல் பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின் திரவியம். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு அரசு உதவிபெறும் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிநியமனம் செய்யப்பட்டார். தனது பணியை அங்கீகரித்து, சம்பளம், பணப்பலன்கள் வாங்க உத்தரவிடக்கோரி, இவர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவை தனி நீதிபதி தள்ளுபடி ெசய்தார். இதனை எதிர்த்து, ஐகோர்ட் மதுரை கிளையில் ஜஸ்டின் திரவியம் மேல்முறையீடு செய்தார்.

இம்மனு ஏற்கனவே விசாரிக்கப்பட்டபோது, அரசுத்தரப்பில், ‘‘இப்பள்ளி நிர்வாகம், இன்னொரு பள்ளியை நடத்துகிறது. அதில் உள்ள உபரி ஆசிரியர்களை இப்பள்ளிக்கு மாற்றலாம். புதிதாக மனுதாரரை நியமித்தது ஏற்புடையதல்ல” என தெரிவிக்கப்பட்டது. இதேபோல் பல்வேறு மேல்முறையீடு மனுக்கள் தாக்கலாகின.


இவ்வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசுத்தரப்பில், “பள்ளிக்கல்வி மற்றும் இடைநிலை கல்விக்கு தமிழகத்தில் 6 ஆயிரத்து 279 ஆசிரியர்கள் உபரி ஆசிரியர்களாக உள்ளனர்.  அவர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் சம்பளத்தால் ரூ.37 கோடியே 17 லட்சத்து 59 ஆயிரம் அரசுக்கு இழப்பீடு ஏற்படுகிறது. எங்கள் கவனத்துக்கு வராமல் பணிநியமனம் நடக்கிறது. 

அங்கீகாரம் கோரும் போதுதான் எங்கள் கவனத்திற்கு வருகிறது” என்றனர். இதை விசாரித்த நீதிபதிகள், “ஒரே நிர்வாகத்தின் கீழ் கல்வி நிறுவனங்களில் உபரி ஆசிரியர்கள் எண்ணிக்கை சரி செய்யப்படும் வரை புதிய ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளக்கூடாது. அப்படி புதிய ஆசிரியர் நியமிக்கப்பட்டால், அதற்கு அரசு அங்கீகாரம் அளிக்கக்கூடாது. சில வழக்குகளின் அடிப்படையில் நீதிமன்றம் உத்தரவு மூலம் நியமனம் மேற்கொள்ள தடையில்லை. அதேபோல், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை பதிவு செய்ய பயோ மெட்ரிக் முறை மேற்கொள்ள வேண்டும்” என உத்தரவிட்டனர்.

Post Top Ad