ஸ்மார்ட்போன் தந்திரங்கள் - இவை தெரிந்திருந்தாலே போதும்.! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, May 11, 2020

ஸ்மார்ட்போன் தந்திரங்கள் - இவை தெரிந்திருந்தாலே போதும்.!

Smartphone tricks - this is enough if you know it! ஸ்மார்ட்போன் தந்திரங்கள் - இவை தெரிந்திருந்தாலே போதும்.!


மொபைல் போன்கள் அதிசிறப்பாக செயல்பட்ட காலம் கடந்துவிட்டது. இன்று ஸ்மார்ட்போன்கள் இருந்தால் எதையும் செய்துவிட முடியும் என்றாகிவிட்டது. அந்தவகையில் உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்காத சில தந்திரங்கள் இருக்கின்றன.


இவை மிகவும் எளிமையான இன்டர்பேஸ் கொண்டிருந்தாலும், தொழில்நுட்பம் நன்கு அறிந்தவர்களுக்கே தெரியாத விஷயங்கள் இருக்கின்றன. இவ்வாறு ஸ்மார்ட்போன் பயன்பாட்டில் பலரும் அறிந்திராத பயன்தரும் அம்சங்கள் பற்றி தொடர்ந்து பார்ப்போம். 



 12. ஆட்டோ ரொட்டேட் ஆஃப் செய்யலாம்: ஸ்மார்ட்போனில் ஆட்டோ ரொட்டேட் அம்சம் தேவைப்படும் போது மட்டும் ஆன் செய்து கொள்ளவும். இந்த அம்சம் எப்போதும் ஆன் செய்யப்பட்டிருந்தால் ஸ்மார்ட்போனின் பேட்டரி சீக்கிரம் தீர்ந்து விடும். 


 11. சார்ஜ் ஆகும் போது பயன்படுத்த வேண்டாம்: ஸ்மார்ட்போன் சார்ஜ் ஆகும் போது பயன்படுத்தினால் பேட்டரி ஆயுள் சீக்கிரம் தீர்ந்துவிடும். இதனாலேயே சார்ஜிங் கேபிள் நீளம் சிறியதாக வழங்கப்படுகிறது. 



 10. ஏர்பிளேன் மோட் அற்புதமானது: ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும் போது அதில் ஏர்பிளேன் மோட் ஆன் செய்தால் வேகமாக சார்ஜ் ஆகும். 

 9. ஷட்டர் பட்டன் இதுவும் செய்யும்: ஸ்மார்ட்போனில் இருக்கும் கன்டினிவஸ் ஷாட் எனும் அம்சத்தை பயன்படுத்தி ஒரு நொடியில் 20 புகைப்படங்களை படமாக்க முடியும். இவ்வாறு செய்ய ஷட்டர் பட்டனை தொடர்ந்து அழுத்திப்பிடிக்க வேண்டும். 



 8. வால்யூம் பட்டனை இப்படியும் பயன்படுத்தலாம்: பெரிய ஸ்மார்ட்போன் வைவைத்திருப்போர் ஷட்டர் பட்டனை பயன்படுத்துவது சிரமமான காரியமாக இருக்கும். இவ்வாறு செய்யும் போது புகைப்படம் தெளிவாக இருக்காது. இதனால் வால்யூம் ராக்கர் கொண்டு புகைப்படம் எடுக்கலாம். 



 7. புகைப்படம் இதற்கும் எடுக்கலாம்: அறிமுகமில்லாத புதிய இடங்களில் வாகனம் நிறுத்தும் போது இடத்தை நினைவில் கொள்ள வாகனம் நிறுத்தும் இடத்தை புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம். இவ்வாறு புகைப்படம் எடுக்கும் போது வாகனம் நிறுத்திய இடத்தை சுலபமாக கண்டறிந்து விடலாம்.



 6. வில் ஆடியோ தரம்: எடுக்கும் போது ஸ்மார்ட்போனின் மைக்ரோபோனினை மறைத்து விட்டால் சிறப்பான ஆடியோவினை பெறலாம். 



 5. கண்ணாடி ஃபில்டர்: இது சற்று வித்தியாசமாக தெரிந்தாலும் நன்கு பலனளிக்கும் ஒன்றாகும். புகைப்படம் எடுக்கும் போது அதிகளவு வெளிச்சம் இருப்பின் கேமராவின் முன் கண்ணாடியை வைக்கலாம். இவ்வாறு செய்யும் போது அதிகப்படியான வெளிச்சம் கட்டுப்படுத்தப்படும். இதனால் புகைப்படம் அழகாகும். 


 4. பேட்டரி பேக்கப் பெற இதை செய்யலாம்: ஸ்மார்ட்போன் பேட்டரியை வெகு விரைவில் தீர்ந்து போக செய்வதில் போனின் பிரைட்னஸ் முக்கிய காரணம் ஆகும். இதனால் போனில் கருப்பு நிற வால்பேப்பர் பயன்படுத்தலாம். 


 3. ஸ்கிரீன் சுத்தம்: ஸ்மார்ட்போன் சுத்தம் பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் கழிவறைகளில் இருப்பதை விட அதிகளவு அழுக்கு மற்றும் கிருமிகள் மொபைல் போனில் இடம்பெற்றிருப்பதாக தெரியவந்தது. 


 2. அலாரம் ஆம்ப்ளிஃபையர்: போன் அலாரம் சத்தம் உங்களை உறக்கத்தில் இருந்து எழுப்பவில்லையா. இனி போனினை கோப்பையினுள் வையுங்கள். இவ்வாறு செய்தால் போன் எழுப்பும் சத்தம் முன்பை விட அதிகமாக இருக்கும். 



 1. போன் ரீஸ்டார்ட்: ஸ்மார்ட்போன் எப்போதும் அதன் முழு திறன் பயன்படுத்துவது நல்லதல்ல. ஸ்மார்ட்போன் சீராக இயங்க வாரத்தில் மூன்று முறையேனும் ரீஸ்டார்ட் செய்ய வேண்டும்.

Post Top Ad