இனி வருமான வரி தாக்கல் நேரடியாக இல்லை.. ஆன்லைனில் மட்டுமே தாக்கல் செய்ய முடியும்!! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, April 10, 2019

இனி வருமான வரி தாக்கல் நேரடியாக இல்லை.. ஆன்லைனில் மட்டுமே தாக்கல் செய்ய முடியும்!!





இனி வருமான வரி தாக்கல் நேரடியாக இல்லை.. ஆன்லைனில் மட்டுமே தாக்கல் செய்ய முடியும்!!! சென்னை : வருமான வரி கணக்கை நேரடியாக தாக்கல் செய்வோருக்கான விண்ணப்ப படிவம் இந்த ஆண்டு முதல் நிறுத்தப்பட உள்ளது என வருமான வரி துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேலாக வருமானம் ஈட்டும் நபர்கள், இணைய தளம் வாயிலாக கணக்கு தாக்கல் செய்யும் முறை தற்போது நடைமுறையில் இருந்து வரும் சூழ்னிலையில், தனி நபர் வருமானம் 2.50 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாய் வரை உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக நேரடியாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் முறையை ரத்துசெய்ய போவதாகவும், இதற்கான விண்ணப்பங்கள் அடுத்த ஆண்டு முதல் நிறுத்தப்படலாம் என்றும் வருமான வரி வட்டாரத்தில் கூறப்படுகின்றன.

இதையடுத்து இதற்கான விண்ணப்படிவமும் நிறுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆண்டு முதல், இந்த நடைமுறை நிறுத்தப்படுகிறது. 80 வயதுக்கு கீழ் உள்ள யாரும் நேரடியாக வருமான வரி அலுவலகத்தில் கணக்கு தாக்கல் செய்ய முடியாது. மேலும் அனைத்து தரப்பினரும் ஆன்லை வழியாக மட்டுமே கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். 80 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ செலுத்த வேண்டும்.

Post Top Ad