B.E பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, April 21, 2019

B.E பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு!



தமிழகத்தில் 550-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் 1 லட்சத்திற்கும் அதிகமான காலியிடங்கள் உள்ளன.

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதிகளை உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 550-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் 1 லட்சத்திற்கும் அதிகமான காலியிடங்கள் உள்ளன. அவற்றுக்கு 2-வது ஆண்டாக ஆன்லைன் முறையில் கலந்தாய்வு நடைபெறுகிறது. இதற்காக தமிழகத்தில் 42 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உதவி மையங்கள் வாயிலாகவும், மாணவர்கள் வீட்டிலிருந்தபடியும் கலந்தாய்வின் மூலம் கல்லூரிகளைத் தேர்ந்தெடுக்கலாம்.

அந்த வகையில் அடுத்த மாதம் 2-ம் தேதி துவங்கி மே 31-ம் தேதி வரை கலந்தாய்விற்கு ஆன்லைன் மூலம்  விண்ணப்பிக்கலாம்.


ஜூன் 3-ம் தேதி ரேண்டம் எண் வெளியிடப்படுகிறது. அரசு அமைத்துள்ள உதவி மையங்களில் ஜூன் 6 முதல் 11-ம் தேதி வரை மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது.

ஜுன் 17-ம் தேதி ரேங்க் பட்டியல்  வெளியிடப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஜூன் 20, 21, 22 ஆகிய தேதிகளில் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் இராணுவத்தினர், விளையாட்டு பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து ஜூலை 3-ம் தேதி துவங்கி ஜூலை 30-ம் தேதி வரை பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.

இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகத்திற்குப் பதிலாகத் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் கலந்தாய்வினை நடத்துகிறது குறிப்பிடத்தக்கது.

Post Top Ad