உள்ளாட்சித் தேர்தல்: 3 மாத அவகாசம் கோரியது தமிழக தேர்தல் ஆணையம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, April 23, 2019

உள்ளாட்சித் தேர்தல்: 3 மாத அவகாசம் கோரியது தமிழக தேர்தல் ஆணையம்





தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த மேலும் 3மாதங்கள் அவகாசம் தேவை என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் கோரியுள்ளது.

முன்னதாக, தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பான அறிவிப்பை 10 நாள்களுக்குள்வெளியிட தமிழக தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்  என்று கோரி வழக்குரைஞர் சி.ஆர்.ஜெய சுகின் உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 9-இல் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவைவிசாரித்த உச்சநீதிமன்றம், 4 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு தமிழக தேர்தல் ஆணையம், தலைமைச் செயலர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது. பின்னர், இந்த வழக்கு  கடந்த நவம்பர் 11-இல் விசாரணைக்கு வந்தபோது, தமிழக தேர்தல் ஆணையமும், தமிழக அரசும்  கோரியதன்பேரில்,4 வாரங்கள் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது.

பின்னர், இந்த வழக்கு பதிவாளர் நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி 21-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் கூடுதல் அவகாசம் கோரப்பட்டது. அதனை ஏற்று 4 வாரம் கூடுதல் அவகாசம் வழங்கிய பதிவாளர், இனி கூடுதல் அவகாசம் வழங்கப்படமாட்டாது என்று தெரிவித்தார்.

இந்நிலையில்,  தமிழக தேர்தல் ஆணையம் கடந்த சனிக்கிழமை தாக்கல் செய்த பதில் மனுவில், மத்திய அரசு நிறுவனமான தேசிய தகவல் மையம், வாக்காளர் இறுதிப் பட்டியலை எங்களுக்கு இன்னும் வழங்கவில்லை. அது கிடைத்த பிறகுதான் அடுத்த நடவடிக்கையை தொடர வேண்டும். இதற்கு 90 நாள்கள் அவகாசம் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post Top Ad