பிளஸ் 2 மாணவர்கள் 4 ஆண்டு பிஎஸ்சி, பிஎட் சேர விண்ணப்பிக்கலாம் காந்திகிராம் #பல்கலைக்கழகம் அறிவிப்பு! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, April 19, 2019

பிளஸ் 2 மாணவர்கள் 4 ஆண்டு பிஎஸ்சி, பிஎட் சேர விண்ணப்பிக்கலாம் காந்திகிராம் #பல்கலைக்கழகம் அறிவிப்பு!





பிளஸ் 2 மாணவர்கள்  4 ஆண்டு பிஎஸ்சி, பிஎட் சேர விண்ணப்பிக்கலாம் காந்திகிராம் பல்கலைக்கழகம்  அறிவிப்பு


மத்திய அரசு பல்கலைக்கழக மான காந்திகிராம் கிராமிய பல் கலைக்கழகம் திண்டுக்கல் அருகே அமைந்துள்ளது.

ஆசிரியர் பணி யில் சேர வேண்டும் என்ற குறிக் கோளுடன் இருக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் இப்பல் கலைக்கழகம் 4 ஆண்டு கால ஒருங்கிணைந்த பிஎஸ்சி. பிஎட் படிப்பை (கணிதம், இயற்பியல், வேதியியல்) வழங்கி வருகிறது. பிஎட் படிப்புக்காலம் 2 ஆண்டு களாக உயர்த்தப்பட்ட நிலையில், பட்டப் படிப்பை முடித்து அதன் பிறகு பிஎட் படித்தால் 5 ஆண்டுகள் ஆகிவிடும்.

 ஆனால், இந்த ஒருங்கிணைந்த பிஎஸ்சி, பிஎட் படிப்பை 4 ஆண்டுகளில் முடித்துவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

 தற்போது 2019-2020-ம் கல்வி ஆண்டில் பிஎஸ்சி, பிஎட் மாண வர் சேர்க்கைக்கான அறிவிப்பை காந்திகிராம் கிராமிய பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது.

 கணிதம், இயற்பியல், வேதியியல்
பாடங் களுடன் பிளஸ் 2 படிப்பை முடிக்கும் மாணவர்கள் இப்படிப்பில் சேர லாம்.


குறைந்தபட்சம் 50 சத வீத மதிப்பெண் அவசியம்.

 நுழைவுத்தேர்வு ஏதும் இல்லாமல் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுவர்.

மாணவர்கள் தங்களுக்கு விருப்பப்படி, கணிதம், இயற்பியல், வேதியியல்-இவற்றில் ஏதேனும் ஒன்றில் ஒருங்கிணைந்த பிஎஸ்சி, பிஎட். படிக்கலாம்.

இதற்கான ஆன் லைன் பதிவு தொடங்கப்பட் டுள்ளது. பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான 10 நாட்களுக்குள் ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

இது ஒரு மத்திய அரசு பல்கலைக்கழகம் என்பதால் மாணவர்களிடம் மிகவும் குறைவான கல்விக்கட்டணமே வசூலிக்கப்படுகிறது.

முதல் 3 ஆண்டுகளுக்கு ஒரு செமஸ்டருக்கு ரூ.6,600 (வேதியியல் பாடப்பிரிவு எனில் ரூ.7,600) செலுத்த வேண்டும்.

 இறுதி ஆண்டு ஒரு செமஸ்டருக்கு அனைத்துப் பாடப்பிரிவினருக்கும் கல்விக்கட்டணம் ரூ.8,600. தகுதி யுடைய பிளஸ் 2 மாணவ-மாணவி கள் ஆன்லைனில்


 பதிவுசெய்யலாம் என காந்தி கிராம் கிராமிய பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது

Post Top Ad