TNTET - ஆசிரியர் தகுதி தேர்விற்கு தயாராவது எப்படி? - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, March 19, 2019

TNTET - ஆசிரியர் தகுதி தேர்விற்கு தயாராவது எப்படி?



தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு டி.என்.டி.இ.டி (TNTET -Tamil Nadu Teachers Eligibility Test) என்பது இரண்டு தாள்களைக் கொண்டது. 3 மணிநேரம் கொண்ட இந்தத் தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி (TRB-Teachers Recruitment Board) நடத்துகிறது. இத்தேர்வு, இரண்டு தாள்களாக நடத்தப்படும்.

தாள்-I : 1-5 வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கானது. டி.டி.எட் (D.T.Ed) எனப்படும் ஆசிரியர் பட்டயத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், இந்தத் தேர்வு எழுதுவார்கள். குழந்தை மேம்பாடும் கற்பித்தலும், தமிழ், ஆங்கிலம், கணிதம், சூழ்நிலையியல் என மொத்தம் 5 பாடங்களில் இருந்து தலா 30 மதிப்பெண்கள் வீதம் 150 மதிப்பெண்களுக்கான தாள் இது.


தாள்-II : 6-8 வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கானதகுதித்தேர்வு. கலை அல்லது அறிவியல் பட்டப்படிப்போடு பி.எட் கல்வியியல் படிப்பை முடித்தவர்கள் இந்தத் தேர்வை எழுதலாம். அறிவியல் பிரிவை சேர்ந்தவர்களுக்கு குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும், தமிழ், ஆங்கிலம் இவற்றில் தலா 30 மதிப்பெண்களோடு கணிதம், அறிவியல் இவற்றை உள்ளடக்கி 60 மதிப்பெண்களுமாக, மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் அமைந்திருக்கும். கலைப்பிரிவு ஆசிரிய பட்டதாரிகளுக்கு இதே கேள்வித்தாளில் கணிதம், அறிவியல் வினாக்களுக்கு பதிலாக சமூக அறிவியலில் இருந்து 60வினாக்கள் அமைந்திருக்கும்.


ஆக, தாள்-I என்பது இடைநிலை ஆசிரியர்களுக்கானது, தாள்-II என்பது பட்டதாரி ஆசிரியர்களுக்கானது. எனினும், ஆசிரியப் பட்டயம் தகுதியோடு கலை அறிவியல் பட்டம் மற்றும் பி.எட் முடித்து பட்டதாரி ஆசிரிய தகுதியையும் உயர்த்திக் கொண்டவர்கள் இந்த இரண்டுதாள்களையும் எழுதலாம். இந்த வகையில் இடைநிலை, பட்டதாரி என இரண்டு பிரிவுகளில் தங்கள் தகுதியை உறுதிபடுத்திக் கொள்ளலாம்.

தாள் - I எழுதுபவர்கள் 1 - 8 வரையிலான வகுப்பு பாடப்புத்தகங்களில் ஆழமாக தயாராக வேண்டும். கூடவே, ஆசிரியர் பட்டய படிப்புக்கான கல்வியியல் மற்றும் உளவியல் பாடத்திலும் தயாராவது அவசியம்.
தாள்- II எழுதுபவர்கள் 6 - 12 வரையிலான தங்கள் பிரிவு பாடங்களில் ஆழமாக தயாராக வேண்டும். கூடவே பி.எட் பாடத்திட்டத்தில் உள்ளகல்வியல் மற்றும் உளவியலில் நன்கு தயாராவதும் அவசியம்.


150 வினாக்களில் ஒவ்வொரு சரியான விடையும் ஒரு மதிப்பெண்பெறும். வினாக்கள் அனைத்தும் 'அப்ஜெக்டிவ் டைப்' எனப்படும்'கொள்குறி' வினா வகையை சேர்ந்தவை.

தேர்வுக்குத் தயாராவதில் அத்தியாவசிய அடிப்படை மாதிரித்தேர்வுகளை நீங்களாகவே அதிகம் எழுதிப்பார்ப்பதில் இருக்கிறது. ஏனெனில், இதுவரை நடந்திருக்கும் ஒரு தேர்வுகளின் அனுபவ அடிப்படையில், தேர்வெழுதியவர்கள் வினாத்தாளில்கடினத்தன்மை மற்றும் நேரமின்மை இவற்றை தேர்வு தடுமாற்றங்களாகஉணர்ந்திருக்கிறார்கள். 
எனவே, கடின பயிற்சி மற்றும் நேர நிர்வாகம் இவற்றை கவனத்தில் கொண்டு தேர்வுக்குத் தயாராகலாம்.
நன்றி : அல்லா பக்‌ஷ்

Post Top Ad