School Morning Prayer Activities - 27.03.2019 - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, March 27, 2019

School Morning Prayer Activities - 27.03.2019

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்


திருக்குறள்:159

துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்.

உரை:
வரம்பு கடந்து நடப்பவரின் வாயில் பிறக்கும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர், துறந்தவரைப் போலத் தூய்மையானவர் ஆவர்.

பழமொழி :

Necessity has no law

ஆபத்துக்கு பாவமில்லை

பொன்மொழி:

நம்பிக்கை குறையும் போது ஒவ்வொரு மனிதனும் நெறியற்ற கொள்கையை
மேற்கொள்கிறான்.

-ஜான்மில்டன்.

இரண்டொழுக்க பண்பாடு :

1. நெகிழிப்பைகள் பயன்பாட்டினை என்னால் இயன்றவரை தவிர்த்திடுவேன்.

2.இயற்கை என்பது இறைவன் கொடுத்த வரம். அதை காப்பதே நம் கடமை.

பொது அறிவு :


1.தமிழ்நாடு மாநில திட்டக் குழுவின் தலைவர் யார்?

முதல்வர்

2.தமிழகத்தின் முதல் பெண் கமாண்டோவின் பெயர் என்ன?

காளியம்மாள்

நீதிக்கதை :

யார் பலசாலி?



‘நான்தான் பலசாலி’ ‘நான்தான் பலசாலி’ என்று சொல்லி சிங்கம் எப்பொழுது பார்த்தாலும் காடு மேடெல்லாம் தற்பெறுமை அடித்துக் கொண்டிருந்தது.

இந்த செயல் மற்ற விலங்குகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அப்படியிருந்தும் சிங்கத்தின் தற்பெருமையை ஒருவரும் அடக்கமுடியாமல் அடங்கி ஒடுங்கி இருந்தனர்.

அந்தக் காட்டில் ஒரு குளம் இருந்தது. அதில் நட்சத்திர ஆமை ஒன்று வாழ்ந்து வந்தது. அந்தக் குளத்தை ஒட்டி ஒரு நாவல் மரம் இருந்தது. அதில் விச்சித்திரன் என்ற அணில் வாழ்ந்து வந்தது. நட்சத்திர ஆமையும், விசித்திரனும் உயிர்த் தேழர்களாகப் பழகி வந்தனர்.

சிங்கம், அணிலைப் பார்த்து ‘மூடனே நான் கீழே இருக்கிறேன். நீ மரியாதை இல்லாமல் மேலே இருப்பதா? நீ என்னைவிட பெரியவனா?  கீழே வந்து என்னை வணங்கி நில். இல்லை தோலை உரித்து கழுகுக்குப் போட்டு விடுவேன்.’ என்று அதட்டியது.

அணில் பயந்து போய்ச் சிங்கம் சொன்னது போல் நடந்தது.

சிங்கம் சென்றதும் குளத்தை விட்டு வெளியே வந்தது நட்சத்திர ஆமை.

தன் நண்பன் அவமானத்தால் தலை குனிந்து நிற்பதைக் கண்ட ஆமை, ‘வசித்திரா சிங்கம் சொன்னதற்கு ஏன் கவலைப்பட்டுத் தலைகுனிந்து நிற்கறே? உலகில் விலிமை உள்ளவர்கள் விலைமை அற்றவர்களை அடக்கி ஆள்வதுதானே வழக்கம்? யானையிடம் இப்படி அதனால் சொல்ல முடியுமா? என்று ஆறுதல் சொன்னது.

நண்பா சிறியவர்  பெரியவர் என்றாலும் தன்மானம் பொதுதானே? தேவை இல்லாமல் இன்னொருவருக்கு அடங்கி ‘சாலம்’ போடுவது கேவலம் இல்லையா? அவரவர் படைப்புக்கும், வேற்றுமைக்கும் ஏற்றபடி அவரவர் பலசாலிகள்தானே? என்று கொதித்தது.

‘நன்பா உன் ஆதங்கம் புரிகிறது. இதன் கொட்டத்தை அடக்கத்தான் வேண்டும். என் அம்மா இதன் கெடுபிடிக்கு அடங்க மறுத்ததற்காக அதை கொன்றுவிட்டது, எனக்கும் இதைப் பழிக்குப்பழி வாங்க தான் ஆசை. அதை எப்படி செய்யலாம்?’


அப்போது அங்கே ஒரு கட்டெறும்பு வந்தது.

‘நண்பர்களே! நீங்கள் பேசியதைக் கேட்டு நானும் கோபம் கொண்டேன். சிங்கத்தின் கொட்டத்தை நான் அடக்குகிறேன்.

அதோ அந்த ஆலமரத்தடியில் தானே சிங்கம் உறங்கும். நாளை அங்கே வந்துவிடுங்கள். ‘யார் பலசாலி’ என்று நிரூபிக்கிறேன்’ என்று ஆலமரத்தில் சென்று தங்கியது.

வழக்கம்போல சிங்கம்  ஆலமரத்தடியில் இளைப்பாறியது.

ஆமை கல்லுக்கடியில் மறைந்துகொண்டது. அணில் புதருக்குள் ஒளிந்துகொண்டது.

எறும்பு சிங்கத்தின் காதுக்குள் மெதுவாகச் சென்று ஙுழைந்து கொண்டு குடைந்தும் கடித்தும் இம்சைப்படுத்துயது.

சிங்கம் வலி தாங்க முடியாமல், ‘அய்யோ... அய்யோ... வலி உயிர்போகுதே. காப்பாத்துங்க காப்பாத்துங்க’ என்று அலறியது.

‘நீ பெரிய பலசாலிதானே, முடிந்தால் காப்பாற்றிக் கொள்ளவும்’
என்று சிறித்தது எறும்பு.

அணிலும், ஆமையும் தைரியமாக வெளியே வந்து சிரித்துக் கூத்தாடியன.

ஒரு கட்டெறும்பிடம் தன்பலம் பலிக்காமல் போகவே, சிங்கம் தன் ஆணவத்தை கைவிட்டது.

ஆமையும், அணிலும், சிங்கத்தை விட்டுவிடும்படி கூறவே, எறும்பு சிங்கத்தின் காதுக்குள் இருந்து வெளியே வந்தது.

அன்றில் இருந்து சிங்கம் தான் மட்டும் பலசாலி என்று சொல்வதை விட்டுவிட்டது.

இன்றைய செய்தி துளிகள்:

1) 5000 அங்கன்வாடி மையங்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் விளையாட்டு பொருட்கள் வாங்க வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு.

2) தேர்தல் பணி காரணமாக ஆரம்பப் பள்ளிகள் 210 நாட்களாக இயங்குவதில் சிக்கல் தவிர்ப்பாணை வழங்க வலியுறுத்தல்

3) TET தேர்வு தவிர்த்து அனைத்து தேர்வுகளும் இனி ஆன்லைன் வழியில் நடைபெறும் : ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு

4) தமிழகத்தில் இறுதி நாளான நேற்று போட்டி போட்டு மனுதாக்கல்: வேட்புமனுக்கள் இன்று பரிசீலனை.. இறுதி வேட்பாளர் பட்டியல் 29ல் வெளியீடு

5) 3வது டி20யிலும் அபார வெற்றி இலங்கையை ஒயிட்வாஷ் செய்தது தென் ஆப்ரிக்கா

Post Top Ad