பொதுத்தேர்வில் முறைகேடு செய்தால் தண்டனை என்ன? - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, March 6, 2019

பொதுத்தேர்வில் முறைகேடு செய்தால் தண்டனை என்ன?


'பொது தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபட்டால், என்ன தண்டனை வழங்கப்படும்' என்ற பட்டியலை, அரசு தேர்வு துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து, தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்டுள்ள அறிவிப்பு:l காப்பி அடிக்க துண்டு காகிதம், புத்தகம் வைத்திருந்து, அதை பார்த்து எழுதாமல், சோதனையின் போது கொடுத்து விட்டால், எந்த தண்டனையும் கிடையாது. விளக்க கடிதம் தர வேண்டும்l காப்பி அடிக்க, 'பிட்' வைத்திருக்கும் மாணவர் பிடிபட்டால், தேர்வறையில் இருந்து வெளியேற்றப்படுவார்; மற்ற தேர்வுகளை எழுதலாம்.

* காப்பி அடித்தது தெரிய வந்தால், தொடர்ச்சியாக இரண்டு பொது தேர்வுகள் எழுத தடை விதிக்கப்படும். அந்த தேர்வின் முடிவுகள் நிறுத்தப்படும். மற்ற மாணவரை பார்த்து எழுதினாலும், இதே தண்டனை வழங்கப்படும்l ஆள் மாறாட்டம் செய்தால், அரசு பொது தேர்வை எழுத முடியாமல், நிரந்தரமாக தடை விதிக்கப்படும். 

விடை தாளில் ஆட்சேபகரமான கருத்துகள் எழுதியிருந்தாலோ, தேர்வு துறை பணிகளில் உள்ளவர்களிடம் கூடுதல் மதிப்பெண் வழங்குமாறு, கடிதம் எழுதினாலோ, அந்த தேர்வின் முடிவு ரத்து செய்யப்படும்.
l* தவறான நடத்தை, தேர்வறை கண்காணிப்பாளர், பறக்கும் படையினரிடம் மோசமாக நடந்து கொள்வது போன்ற குற்றங்களில் ஈடுபட்டால், தேர்வு முடிவு ரத்து செய்யப்படும். தேர்வு முடிவதற்கு முன், வினாத்தாளை, 'லீக்' செய்தால், மூன்று ஆண்டுகளுக்கு அரசு தேர்வை எழுத முடியாது. விளக்கம் தர மறுத்தால், தேர்வு முடிவு ரத்தாகும்.

* விடைத்தாள் மதிப்பீட்டின் போது, தேர்வர் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப் பட்டால், தேர்வு முடிவு ரத்தாகும். விடை தாளில் பெயர், சிறப்பு குறியீடுகள் இட்டு அடையாளம் காட்டினால், விளக்க கடிதம் தர வேண்டும். வினாத்தாளில் விடை எழுதி மற்றவருக்கு வழங்கினால், தேர்வு முடிவு ரத்தாகும்.இவ்வாறு, அவர் அறிவித்துள்ளார்.

Post Top Ad