நூறாண்டு ஆலமரத்தை காக்க இணைந்த ஆசிரியர்களும் அரசு அலுவலர்களும் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, March 26, 2019

நூறாண்டு ஆலமரத்தை காக்க இணைந்த ஆசிரியர்களும் அரசு அலுவலர்களும்





சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சிவகங்கை நெடுஞ்சாலையில் *ஆலமரத்து ஸ்டாப்* என்ற தனி அடையாளத்துடன் கம்பீரமாக நின்று கொண்டிருந்தன நூறாண்டுகள் கடந்த மூன்று ஆலமரங்கள். தற்போது சாலை விரிவாக்கப் பணிகளுக்காக அம்மூன்று ஆலமரங்களும் வேரோடு சாய்க்கப்பட்டன.



இதைக் கண்டு ஆதங்கப்பட்ட ஆசிரியர்கள் அம்மரங்களை மீண்டும் நட்டு உயிர் கொடுக்கும் முயற்சியில் இறங்கினார்கள். அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என அறிந்ததும்  திருப்பத்தூர் பகுதியில் உள்ள லயன்ஸ் கிளப், ஆறுமுகம் பிள்ளை  சீதையம்மாள் கல்லூரி, நெடுஞ்சாலை துறை, தோட்டக்கலைத்துறை, பொதுப்பணித்துறை, வனத்துறை, மின்சாரத்துறை, காவல்துறை, வர்த்தக சங்கம், நடைபயிற்சியாளர் சங்கம், பேரூராட்சி, கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள்,  கல்வித் துறை ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரிடமும் உதவிகள் பெறப்பட்டது. கல்லூரி துணை முதல்வர் கோபிநாத், லயன்ஸ் கிளப் இரங்கசாமி, ஆசிரியர்கள் இராதாகிருஷ்ணன், ஸ்ரீதர்ராவ், சிங்கராயர், கணேசன் ஆகியோர் முன்னின்று இந்நிகழ்வை செயல்படுத்தினார்கள்.

சாலைப் பணிக்காக வெட்டப்படும் மரங்களை மீண்டும் நட்டு வளர்க்கும் இம்முயற்சியை பெரியோர்களும், மக்களும் மனதார பாராட்டினார்கள். அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழும் திருப்பத்தூர் பகுதி ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் இம்முயற்சிக்கு பாராட்டுகள் குவிகின்றன.

Post Top Ad