கோடைக்கு இதமாய் ஐஸ் வாட்டர் குடித்தால் ரத்தக்குழாய் வெடிக்கும்...! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, March 19, 2019

கோடைக்கு இதமாய் ஐஸ் வாட்டர் குடித்தால் ரத்தக்குழாய் வெடிக்கும்...!



வெயில் உச்சத்திற்கு போய்க்கொண்டிருக்கிறது.  40 டிகிரி செல்சியஸ் அல்லது 105 டிகிரி அனல் காற்று வீசும் என்றும் பகலில் பயணம் செய்யாதீர்கள் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்கிறது.


இந்நிலையில் சுட்டெரிக்கும் வெயில் இயல்பாகவே நமக்கு ஐஸ் வாட்டர் மீது விருப்பத்தை தூண்டும். உடனே பிரிட்ஜில் இருந்து குளிர்ந்த நீரை எடுத்து மடக் மடக்கென்று குடிப்போம்.



அப்படி குடித்தால் நமது உடலின் சிறிய ரத்தக்குழாய்கள் வெடித்துவிடும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஒரு மருத்துவர் தனது நண்பர் வெயிலில் சுற்றிவிட்டு வீட்டுக்குள் வந்து குளிர்ந்த நீரால் பாதத்தை கழுவியிருக்கிறார். உடனே, அவருடை பார்வை மங்கி கீழே விழுந்திருக்கிறார். அவர் பயந்து நடுங்கியிருக்கிறார்.



வெயில் 100 டிகிரி அடித்தாலும், நமது உடல் அதைக்காட்டிலும் அதிக உஷ்ணமாகும். ஐஸ் வாட்டரை குடிப்பது மட்டுமே ஆபத்து அல்ல. ஐஸ் வாட்டரில் கைகளையோ, முகத்தையோ, பாதங்களையோ கழுவுவதுகூட ஆபத்து என்கிறார்கள். அதாவது, உஷ்ணமான நமது உடலை ஐஸ் நீரால் திடீரென தாக்கக்கூடாது என்கிறார்கள். வீட்டுக்குள் நுழைந்து 30 நிமிடங்கள் வரை ஆசுவாசப்படுத்தி, வீட்டுக்குள் நிலவும் வெப்பத்துக்கு நமது உடலை தயார்செய்துவிட்டு பிறகுதான் இயற்கையான குளிர் நீரிலோ, வெதுவெதுப்பான அதாவது 90 முதல் 95 டிகிரி வெப்பமுள்ள தண்ணீரை குடிக்கலாம்.

cold water

நல்ல உறுதிவாய்ந்த உடலுடைய நபர் வெயிலில் அலைந்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்தார். கொதிக்கும் தனது உடலை உடனடியாக குளிர வைக்க விரும்பி குளிர்நீர் ஷவரில் குளித்தார். உடனே, அவருடைய தாடைகள் இறுகிக்கொண்டன. வாயை திறக்க முடியவில்லை. நல்லவேளை ஆம்புலன்ஸை வரவழைத்து மருத்துவமனைக்கு கொண்டுபோனார்கள். கைகால்கள் முடங்கி, உயிரை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. நடப்பதற்கே சிரமப்படும் நிலையில் அவர் இருக்கிறார் என்று ஒரு டாக்டர் கூறுகிறார்.


வெயில் நேரத்தில் பிரிட்ஜ் வாட்டர், ஐஸ் போட்ட வாட்டரை குடிக்காதீர்கள். வீட்டில் உள்ள பெரியவர்கள் குழந்தைகளுக்கும் எச்சரிக்கை செய்யுங்கள். ஐஸ் வாட்டரை தவிர்த்து உடல்நலத்தை பாதுகாப்போம் என்ற பிரச்சாரம் இப்போது பரவி வருகிறது.

Post Top Ad