இளம் விஞ்ஞானி திட்டத்தின் கீழ் தகுதியுள்ள 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி Training for 9th standard students eligible under the Young Scientist Program - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, March 29, 2019

இளம் விஞ்ஞானி திட்டத்தின் கீழ் தகுதியுள்ள 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி Training for 9th standard students eligible under the Young Scientist Program




இளம் விஞ்ஞானி திட்டத்தின் கீழ் தகுதியுள்ள 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு இஸ்ரோ 2 வாரப் பயிற்சியில் சேர்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது. 



ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் தலா மூன்று 9-ம் வகுப்பு மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும் இஸ்ரோ, அவர்களை சிறந்த விஞ்ஞானிகளுடன் துறை ரீதியாகக் கலந்துரையாடும் வாய்ப்பை வழங்குகிறது. 



கோடை விடுமுறையான மே மாதத்தில் 2 வாரப் பயிற்சியின் போது இஸ்ரோவின் ஆராய்ச்சிக் கூடங்களுக்கும் மாணவர்களை அழைத்துச் சென்று அவற்றின் செயல்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கிறது. 8-ம் வகுப்பில் 50 சதவீத மதிப்பெண், அறிவியல் கிளப், விண்வெளி கிளப் போன்றவற்றில் இடம் பெற்றிருக்க வேண்டும், கல்வி போக பிற கட்டுரை போன்ற திறமைகளில் பரிசு பெற்றிருத்தல், விளையாட்டில் பரிசு பெற்றிருத்தல் உள்ளிட்ட தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. 



 ஊரக கிராமப பகுதி மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் இந்த பயிற்சிக்கு, isro.gov.in என்ற இணையதளத்தில் ஏப்ரல் 3-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

Post Top Ad