தமிழக கல்வித்துறையில் வேலை - ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.03.2019 - Asiriyar.Net

Post Top Ad

Saturday, March 9, 2019

தமிழக கல்வித்துறையில் வேலை - ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.03.2019தமிழக அரசின் கல்வித்துறையில் காலியாக கண்காணிப்பாளர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Assistant Superintendent of Approved Schools (Men‟s Wing) - 02
பணி: Assistant Superintendent of Approved Schools (Women‟s Wing) - 01
பணி: Assistant Superintendent (Vigilance Institutions) - 02

சம்பளம்: மாதம் ரூ.35,900 - 1,13,500

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Criminology, Forensic Science போன்ற பிரிவுகளில் முதுகலை பட்டம் அல்லது Psychology, Philosophy பிரிவுகளில் Psychology -ஐ ஒரு பாடமாகக் கொண்டு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

உடற்தகுதி: ஆண்கள்:  160 செ.மீ உயரமும், மார்பளவு 79 செ.மீ. 5 செ.மீ சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும்.

பெண்கள்: உயரம் - 145 செ.மீ உயரமும், மார்பளவு 71 செ.மீ. 2 செ.மீ சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு 2 தாள்களைக் கொண்டது. முதல் தாள் 300 மதிப்பெண்களும், இரண்டாம் தாள் 200 மதிப்பெண்களும் கொண்டது.

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 21.04.2019

தேர்வு மையங்கள்: சென்னை, மதுரை, கோயம்புத்தூர்

விண்ணப்பக் கட்டணம்: தேர்வுக் கட்டணம் ரூ.150, பதிவுக் கட்டணம் ரூ.50. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். ஒன் டைம் பதிவுக்கட்டணம் செலுத்தி பதிவு செய்யாதவர்கள் மட்டும் பதிவுக் கட்டணம் ரூ.150 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, விதவை பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தேர்வு கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய 


என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.03.2019

Recommend For You

Post Top Ad