School Morning Prayer Activities - 21.02.2019 - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, February 21, 2019

School Morning Prayer Activities - 21.02.2019

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்




திருக்குறள் : 135

அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு.

உரை:

பொறாமை உடையவனிடத்தில் ஆக்கம் இல்லாதவாறு போல, ஒழுக்கம் இல்லாதவனுடைய வாழ்க்கையில் உயர்வு இல்லையாகும்.

பழமொழி:

It takes two to make quarrel

இரு கை தட்டினால் தான் ஓசை

பொன்மொழி:


சோகம் எனும் பறவைகள் உங்கள் தலைக்கு மேல் பறப்பதைத் தடுக்க இயலாது. ஆனால் உங்கள் தலையில் கூடுகட்டி வாழ்வதைத் தவிர்க்கலாம்.

- ஸ்டீலி

இரண்டொழுக்க பண்பாடு :

1) விவசாயம் உலகின் அச்சாணி என்பதை நான் புரிந்து கொண்டேன். எனவே விவசாயத்தையும், விவசாயிகளையும் மதித்து நடப்பேன்.

2) என் பெற்றோர், உறவினர் மற்றும் நண்பர்களிடம் விவசாய பொருட்களை பேரம் பேசாமல் வாங்க வலியுறுத்துவேன்.

பொது அறிவு :

1) உலகத்தின் மிகப்பெரிய வைரம் எது ?
 குல்லீனியன்.

2) மயில்களின் சரணாலயம் எது ?
 விராலிமலை

நீதிக்கதை :

பேராசை பெரும் நஷ்டம்

கந்தசாமி என்ற ஒரு ஏழை தன் மனைவியுடன் சிறு குடிசை ஒன்றில் வாழ்ந்து வந்தான். வயதாகி விட்டதால் வேலைக்கும் செல்ல முடியாது போகவே, தங்களிடம் இருந்த பொருட்களை விற்று சாப்பிட வேண்டி ஏற்பட்டது. நாட்கள் செல்லச்செல்ல…அவர்கள் உண்ண உணவின்றி தவித்தனர்.


இந்நிலையில் அவன் ஆண்டவனை நோக்கி …’இறைவா எங்களை ஏன் இப்படி படைத்தாய்…இது இப்படியே நீடித்தால்….வறுமை தாங்காது…நாங்கள் இறப்பதை தவிர வேறு வழியில்லை’ என வேண்டினான்.

அவன் மீது இரக்கம் கொண்ட இறைவன் அவன் முன் தோன்றி அவனின் குறைகளைத்தீர்க்க….அவனுக்கு வாத்து ஒன்றை பரிசளித்தார். அந்த வாத்து தினம் ஒரு பொன் முட்டை இடும் என்றும்…அதை விற்று அன்றடம் குடும்பத்திற்கு தேவையானவற்றை வாங்கி வாழ்நாளைக் சந்தோஷமாக கழிக்கலாம் என்றும் கூறி மறைந்தார்.

வாத்து தினம் ஒவ்வொரு பொன் முட்டையிட …அவர்கள் அதனை விற்று வாழ்கையை இனிதாகக் கழிந்தனர்.

ஒரு நாள் கந்தசாமியின் மனைவி தன் கணவனிடம் சென்று ‘தினம் தினம் இந்த வாத்து ஒவ்வொரு பொன் முட்டையே இடுகின்றது, இப்படியே இருந்தால் நாம் எப்படிப் பெரிய பணக்காரர் ஆவது என்று சொல்லி, இந்த வாத்தின் வயிற்றில் இருக்கும் எல்லா முட்டைகளையும் நாம் எடுத்தால் அதை விற்று பெரிய பணக்காரர் ஆகிவிடலாம் என்று ஒரு உபாயம் சொன்னாள்.  இதைக் கேட்ட கந்தசாமிக்கும் அது சரியெனப் தோன்றியது.

உடனே, கந்தசாமி அந்த வாத்தைப் பிடித்து வாத்தின் வயிற்றில் இருக்கும் எல்லா முட்டைகளையும் எடுக்க வாத்தை கொன்று அதன் வயிற்றைக் கிழித்தான். “ஆ” என்ன ஆச்சரியம் அந்த வாத்தின் வயிற்றில் ஒருமுட்டையுமே இருக்கவில்லை. அதன் வயிறில் மற்றைய வாத்துகள்போல் வெறும் குடலே இருந்தது கண்டு ஏங்கினர்.

தினம் ஒரு பொன் முட்டையிட்ட வாத்து இறந்து விட்டதால், வறுமை அவர்களை மீண்டும் சூழ்ந்துகொண்டது.

தங்கள் பேராசையே பெரும் தரித்திரத்தை தந்தது என மனம் வருந்தி ஏழ்மையாகவே வாழ்ந்து உண்ண உணவின்றி இறந்தனர்.

ஆசை அளவுக்கு மிஞ்சினா; அது பேராசை. பேராசை பெரு நஷ்டத்தையும் கஷ்டத்தையும் தரும்.




இன்றைய செய்தி துளிகள் : 

1) பொது தேர்வுகள் அனைத்தும் சிசிடிவி மூலம் கண்காணிப்பு :தேர்வு முறைகேடுகளை தடுக்க பள்ளிக் கல்வித்துறை அதிரடி

2) 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழகத்தில் இந்த ஆண்டே பொதுத்தேர்வு நடத்தப்படும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

3) ஏழை தொழிலாளர்களுக்கு ரூ.2000 வழங்கும் திட்டம்..... பிப்.,24ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் பழனிச்சாமி

4) கல்வித் தரம் மீது விளையாடினால் கடும் நடவடிக்கை பாயும்: உச்ச நீதிமன்றம்

5) உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுமா? : வரும் 27ம் தேதி நடைபெறும் ஐசிசி கூட்டத்தில் முடிவு

Post Top Ad