பள்ளி கொடையாளர்களை கவுரவிக்க கல்விச்சீர் திட்ட ஊக்கமளிப்பு விழா மாவட்டந்தோறும் நடத்த கல்வித்துறை முடிவு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, February 9, 2019

பள்ளி கொடையாளர்களை கவுரவிக்க கல்விச்சீர் திட்ட ஊக்கமளிப்பு விழா மாவட்டந்தோறும் நடத்த கல்வித்துறை முடிவு





பள்ளி கொடையாளர்களை கவுரவிக்க கல்விச்சீர் திட்ட ஊக்கமளிப்பு விழா மாவட்டந்தோறும் நடத்த கல்வித்துறை முடிவு

பள்ளி கொடையாளர்களை கவுரவிக்க மாவட்டந்தோறும் 'கல்விச்சீர் திட்ட ஊக்கமளிப்பு விழா' நடந்த கல்வித்துறை முடிவு செய்துள்ளது

தமிழகத்தில் கல்வித்துறையின் கீழ் 37,538 பள்ளிகள் இயங்குகின்றன

இதில் 7, 444 பள்ளிகளை கல்வி மேலாண்மைக்குழு சார்பில் தேர்வு செய்து, அதன் கொடையாளர்கள் கவுரவிக்கப்பட உள்ளனர்.ஆரம்ப பள்ளிகள் 6, 245, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் 1, 199 என, மொத்தம் 7,444 பள்ளிகளின் கொடையாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர

தேனியில் ஆரம்பப் பள்ளிகள் 85, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் 20 என, 105 பள்ளிகள் தேர்வாகியுள்ளன

 இதேபோல் மதுரை, விருதுநகர், திண்டுக்கல் மாவட்டத்திலும் 300க்கும் மேற்பட்ட பள்ளிகளின் கொடையாளர்கள் தேர்வு செய்து கவுரவிக்கப்பட உள்ளனர்

இதற்காக ரூ.1 கோடியே 11 லட்சத்து 66 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது என, தேனி மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Post Top Ad