பொது தேர்விற்காக... மாணவர்களுக்கு சில டிப்ஸ் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, February 28, 2019

பொது தேர்விற்காக... மாணவர்களுக்கு சில டிப்ஸ்




பொது தேர்விற்காக... மாணவர்களுக்கு சில டிப்ஸ்

1. குறித்த நேரத்திற்கு முன்பாக தேர்வு மையத்திற்கு சென்று இறுதி நேர பதற்றத்தை தவிர்த்து கொள்ள வேண்டும்.

2. தேர்விற்கு முந்தைய நாளே தேர்விற்கான எழுது பொருட்களை தயார் செய்து கொள்ள வேண்டும்.

3. கூடுதலாக ஒரு பேனா கையில் வைத்திருப்பது தேர்வறையில் உதவும்.

4. தேர்விற்கு முந்தைய இரவு அதிகம் விழித்து படிப்பதை தவிர்க்க வேண்டும்.

மன வரைப்படம் போல படித்து நினைவுகூர்தலை பயிற்சி எடுங்கள். சிறு குறிப்புகள் எடுங்கள். இறுதி நேர திருப்புதலில் உதவும்.

ஒவ்வொரு வினாவிலும் - நினைவு கூர்தலுக்காக முக்கிய கருத்துளை points ஆக மனதில் கொள்ளுங்கள்.


5. தேர்வு காலங்களில் அதிகம் பழங்கள் & காய்கறிகளை உணவாக எடுத்து கொள்ள வேண்டும்.

அதிகளவில் நீர் பருக வேண்டும்.

6. தேர்வறைக்கு செல்லும் முன் சிறு காகித துண்டு துணுக்குகள் உள்ளனவா சுய பரிசோதனை செய்து தன்னம்பிக்கையுடன் தேர்வறை செல்ல வேண்டும்.

7. முன் திட்டமிடல் மற்றும் நேர மேலாண்மை மிக அவசியம்.

8. வினாத்தாள் படிக்கும் 10 நிமிடம் மிக முக்கிய தருணம். சலனமின்றி வினாத்தாளை படியுங்கள். வினாத்தாள் எவ்வளவு கடினத் தன்மை மிக்கதாய் இருப்பினும் பதற்றம் வேண்டாம். நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவும்.

9. தேர்வு தாளில் கையொப்பமிட மறக்க வேண்டாம்.

10. தேர்வு முடிந்த பிறகு வினாத்தாள் பற்றி கலந்துரையாடலை தவிர்க்கவும். எழுதியவை மாறப்போவதில்லை.

11. சிறு உறக்கம் எடுத்து கொண்டு புத்துணர்வுடன் அடுத்த தேர்விற்கு படிக்கவும்.

12. விடுமுறை நாள் சோம்பலை தவிர்க்க குழுவாக படியுங்கள் அல்லது பள்ளி சென்று படியுங்கள்.

13. இறுதி நேரத்தில் படித்ததை மீள்பார்வை செய்யுங்கள்.
புதியவை படிக்க வேண்டாம்.

14. தேர்வை மயிலிறகை போல மென்மையாய் அணுகவும் . மகிழ்வாய் தேர்வினை எழுதுங்கள் .

15. உங்களுக்கு வழிகாட்டியான பெற்றோர் அல்லது  ஆசிரியர்களிடம் ஆசி பெற்று செல்லுங்கள். கூடுதல் நம்பிக்கை பிறக்கும்.

15. Creative வினாக்காளை பாடத்துடன் தொடர்புபடுத்தி சிந்தித்து தீர்வு கண்டு - விடையளிக்கவும்.

16. வெயில் வெப்பம் அதிகம் இருப்பதால் சரியான அளவு நீர் கொண்ட இயற்கை உணவு பொருட்களை உட்கொள்ளுங்கள்.

17. தேர்விற்கு முந்தைய நாள் தயாரிப்புகளில் - ஏற்கனவே பலமுறை படித்ததன் காரணமாக ஏற்படும் சலிப்பினை தவிர்க்க மனதை ஒருநிலைபடுத்தி மகிழ்ச்சியாய் வைத்து கொள்ளுங்கள்.

18. படிப்பதன் இடைவெளிகளில் இயற்கை சூழலை ரசிக்க நடை பயணம் மேற்கொள்ளுங்கள். TV பார்ப்பது படித்ததை மறக்க செய்யும். மாறாக நல்ல இசை கேட்கலாம்.

19. நம்மை நாம் வெளிபடுத்த _ நமக்கு கிடைத்த வாய்ப்பு என எண்ணி படியுங்கள்.

20. இறுதியாக தன்னம்பிக்கை - இது ஒன்று மட்டும் போதும். எதிர்வரும் தேர்வில் எண்ணிய இலக்கை எட்டலாம்.

முயற்சியும் - பயிற்சியும் வெற்றியின் வழிகாட்டிகள்.

வாகை சூட வாழ்த்துகளுடன் கனவு பள்ளி பிரதீப்

Post Top Ad