தமிழகத்தில், பள்ளி மற்றும் கல்லுாரிகளில், ஆண்டு இறுதித் தேர்வுகள்,எப்போது துவங்கி, எப்போது நிறைவடைகின்றன என்ற விபரத்தை, தமிழக அரசிடம், தேர்தல் கமிஷன் கேட்டுள்ளது - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, February 17, 2019

தமிழகத்தில், பள்ளி மற்றும் கல்லுாரிகளில், ஆண்டு இறுதித் தேர்வுகள்,எப்போது துவங்கி, எப்போது நிறைவடைகின்றன என்ற விபரத்தை, தமிழக அரசிடம், தேர்தல் கமிஷன் கேட்டுள்ளது




தமிழகத்தில், பள்ளி மற்றும் கல்லுாரிகளில், ஆண்டுஇறுதித் தேர்வுகள், எப்போது துவங்கி, எப்போது நிறைவடைகின்றன என்ற விபரத்தை, தமிழக அரசிடம், தேர்தல் கமிஷன் கேட்டுள்ளது.

லோக்சபா தேர்தல், விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. மார்ச் முதல் வாரத்தில், தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில், ஏப்ரல் இறுதியில் தேர்தல் நடத்தும்படி, அ.தி.மு.க., சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், தமிழகத்தில் உள்ள, பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில், ஆண்டு இறுதித் தேர்வு, பருவத் தேர்வு போன்றவை, எப்போது துவங்கி, எப்போது நிறைவடைகின்றன என்ற விபரத்தை, தமிழக அரசிடம், தேர்தல் கமிஷன் கேட்டுஉள்ளது. தேர்வுகளை பொறுத்து, தேர்தல் தேதியை முடிவு செய்ய, தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது.

கூடுதல் அதிகாரிகள்தமிழகத்தில், தேர்தல் பணிகளை மேற்கொள்வதில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்குஉதவுவதற்காக, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், பாலாஜி, ராஜாராமன் ஆகியோர், கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர்.கூடுதலாக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி, பிரதீப் ஜேக்கப், மாவட்ட வருவாய் அலுவலர், மணிகண்டன் ஆகியோர், இணை தலைமை தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.இடமாற்றம்தமிழகம் முழுவதும், தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஊழியர்கள், ஒரே இடத்தில், மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தவராக இருந்தால், அவர்களை, 15ம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய வேண்டும்.

இது பற்றி, அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, சத்யபிரதா சாகு, கடிதம் அனுப்பி இருந்தார்.இது தொடர்பாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, வரும், 22ம் தேதி, தேர்தல் கமிஷனுக்கு அறிக்கை அளிக்க உள்ளார்.தேர்தல் பணிகள் குறித்துஆய்வு செய்வதற்காக, விரைவில், தலைமை தேர்தல் கமிஷனர், தமிழகம் வர உள்ளார். தற்போது, வட மாநிலங்களில் ஆய்வு செய்து வருகிறார்.

Post Top Ad