அரசு ஊழியர்களின் குழந்தைகள் அரசு பள்ளிகளில் படிக்க, அவசர சட்டம்? சட்டசபையில் நடந்த விவாதம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, February 13, 2019

அரசு ஊழியர்களின் குழந்தைகள் அரசு பள்ளிகளில் படிக்க, அவசர சட்டம்? சட்டசபையில் நடந்த விவாதம்




''அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் குழந்தைகள், அரசு பள்ளிகளில் படிக்க, அவசர சட்டம் வர வேண்டும்,'' என, காங்., - எம்.எல்.ஏ., காளிமுத்து பேசினார்.சட்டசபையில் நடந்த விவாதம்:காங்., - காளிமுத்து: இலவசங்களை கொடுப்பதற்கு பதிலாக, வேலை வாய்ப்பை வழங்க வேண்டும். போலீஸ் நிலையங்களில், தவறு நிகழ்வதை தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.பயிர் காப்பீட்டு தொகையை, அரசே செலுத்த வேண்டும். விவசாய விளை பொருட்களுக்கு, உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் குழந்தைகளை, அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும். 

அரசியல்வாதிகளின் குழந்தைகள், தனியார் பள்ளிகளில் படித்தால், தேர்தலில் நிற்க தடை விதிக்க வேண்டும். இதற்கு, அரசு அவசர சட்டம் இயற்ற வேண்டும்.தனியார் பள்ளி மாணவர்களை, தனி வாகனங்களில் அழைத்து செல்வது போல, அரசு பள்ளி மாணவர்களை அழைத்து வர, பஸ் வசதி செய்ய வேண்டும்.அமைச்சர் செங்கோட்டையன்: தமிழகத்தில், 52 ஆயிரம் அரசு பள்ளிகள் உள்ளன. அரசு பள்ளி மாணவர்களை, தனி பஸ்கள் வைத்து, அழைத்து வருவது சாத்தியமில்லை. எனவே தான், மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. இது தவிர, 11.17 லட்சம் மாணவ, மாணவியருக்கு, இலவச சைக்கிள் வழங்கி உள்ளோம்.இவ்வாறு, விவாதம் நடந்தது.

Post Top Ad