ஓய்வூதியம் இனிமேல் இப்படித்தான்!! நீதிமன்றம் சென்றுதான் வாங்கனும்... - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, February 3, 2019

ஓய்வூதியம் இனிமேல் இப்படித்தான்!! நீதிமன்றம் சென்றுதான் வாங்கனும்...



ஓய்வுபெற்ற பஸ் டிரைவருக்கு , ஓய்வூதிய பலன்:

ஐகோர்ட் உத்தரவு!

சென்னை:'நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததற்காக, ஓய்வூதிய பலன்களை நிறுத்தி வைக்க முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கோவை மாவட்டம், உப்பிலியாபாளையத்தை சேர்ந்தவர், ஆர்.கணேசன். அரசு போக்குவரத்து கழகத்தில், டிரைவராக பணியாற்றி, 2018 செப்டம்பரில் ஓய்வு பெற்றார்.சம்பளத்துடன் கூடிய விடுமுறைக்கான ஊதியம் வழங்க கோரி, 2018 ஜனவரியில், உயர் நீதிமன்றத்தில், இவர் தாக்கல் செய்த மனு, நிலுவையில் உள்ளது.
பணி ஓய்வுக்கு பின், ஓய்வூதிய பலன்கள் வழங்கும்படி, போக்குவரத்து கழக நிர்வாகத்துக்கு மனு அனுப்பினார். எந்த நடவடிக்கையும் இல்லை.

இதையடுத்து, உயர் நீதிமன்றத்தில், கணேசன் மனு தாக்கல் செய்தார். மனுவை, நீதிபதி, எஸ்.விமலா விசாரித்தார். மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஆஜரானார்.
நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

உரிமைகள் கேட்டு, நீதிமன்றத்தை நாடுவது, ஒருவரது அடிப்படை உரிமை. அதற்காக, ஊழியருக்கு எதிராக, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியாது. ஓய்வூதிய பலன்களை நிறுத்தி வைப்பதில், எந்த நியாயமும் இல்லை.

ஓய்வூதிய பலன்கள் வழங்க கோரி, மனுதாரர் மனுவும் அளித்துள்ளார்.எனவே, ஒன்பது மாத தவணைகளில், ஓய்வூதிய பலன்களை அளிக்கும்படி, கோவை அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனருக்கு உத்தரவிடப்படுகிறது. முதல் தவணை, இம்மாதத்தில் இருந்து துவங்கப்பட வேண்டும்.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.

நன்றி : தினமலர் நாளிதழ்

Post Top Ad