பி.எஃப் வட்டி விகிதம் 8.55%லிருந்து 8.65%ஆக உயர்வு! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, February 22, 2019

பி.எஃப் வட்டி விகிதம் 8.55%லிருந்து 8.65%ஆக உயர்வு!





தொழிலாளர்களுக்கான பி.எஃப் வட்டி விகிதம் 0.1% உயர்த்தப்பட்டுள்ளதாக இன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் பி.எஃப் வட்டி 8.55%லிருந்து 8.65%ஆக உயருகிறது. தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் (EPFO) தொழிலாளர்களின் பி.எஃப் கணக்கு வட்டி விகிதத்தை உயர்த்தி இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, தொழிலாளர்களுக்கான பி.எஃப் வட்டி விகிதம் 0.1% உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பி.எஃப் வட்டி 8.55% லிருந்து 8.65% ஆக உயருகிறது. 2018-19 நிதியாண்டில் இருந்து இது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று டெல்லியில் இ.பி.எஃப்.ஓ நிறுவன அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த உயர்த்தப்பட்ட வட்டி விகிதம் மூலம் கூடுதலாக ரூ.151 கோடி செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் அறிவித்துள்ள வட்டி வீத உயர்வு, தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தின் பரிந்துரை மூலம் நிதித்துறை அமைச்சகம் வழங்கும். சிபிடி எனப்படும் முத்தரப்புக் குழுவில் தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் அரசு, தொழில் நிறுவனங்கள் மற்றும் வர்த்தக சங்கங்கள் செயல்படும்.

இதுவே தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் தலைமைக் குழுவாகும். இந்த 8.65% வட்டி வீதமானது, அரசின் சிறுசேமிப்பு திட்டங்களுக்கு வழங்கப்படும் வட்டி வீதத்தை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் 60 மில்லியன் பேர் அங்கத்தினர்களாக உள்ளனர். இவர்களின் ஓய்வூதிய சேமிப்பாக ரூ.11 லட்சம் கோடி உள்ளது

Post Top Ad