கல்வித்துறையில் மீண்டும் 'ஆப்பரேஷன் இ' திட்டம்; முதல் நாளில் 50 பள்ளிகளில் ஆய்வு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, February 6, 2019

கல்வித்துறையில் மீண்டும் 'ஆப்பரேஷன் இ' திட்டம்; முதல் நாளில் 50 பள்ளிகளில் ஆய்வு

அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளை ஆய்வு செய்யும் 'ஆப்பரேஷன் இ' திட்டத்தை கல்வித்துறை மீண்டும் துவங்கியுள்ளது.

வழக்கமான பள்ளி ஆய்வு தவிர சி.இ.ஓ., முதல் பி.இ.ஓ., வரை 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் குழுக்கள் முன்னறிவிப்பின்றி பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளும் இத்திட்டத்தை சி.இ.ஓ.,வாக இருந்த கோபிதாஸ் மதுரையில் (தற்போது இணை இயக்குனராக உள்ளார்) செயல்படுத்தினார்.

இதில் இறைவணக்கம், ஆசிரியர் வருகை நேரம், மாணவரின் வாசிப்பு திறன், எழுதும் திறன், ஆசிரியர் கற்பித்தல் திறன், ஆசிரியர் பராமரிக்கும் பதிவேடுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.
ஆசிரியர் பயிற்றுனர்களால் மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்தி மதிப்பீடு செய்யப்படும்.

அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் ஆலோசனைகள் அளிக்கப்படும்.


 இத்திட்டத்தால் கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கு கூட சரியான நேரத்தில் ஆசிரியர்கள் வருகை இருந்தது. பதிவேடுகள் சரியாக பராமரிக்கப்பட்டன.

ஆனால் இத்திட்டம் சில வாரங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முதல் மீண்டும் துவங்கியுள்ளது.

சி.இ.ஓ., சுபாஷினி, டி.இ.ஓ.,க்கள் அமுதா, முத்தையா, ஏ.டி.பி.சி., திருஞானம், ஏ.பி.ஓ., சிவக்குமார் மற்றும் பி.இ.ஓ.,க்கள் என 15 குழுவினர் 50 பள்ளிகளில் ஒரே நாளில் ஆய்வில் ஈடுபட்டனர்.
சுபாஷினி கூறியதாவது: கற்றல் கற்பித்தல் திறனை மேம்படுத்துவதே இத்திட்ட நோக்கம்.


 வாரம் ஒரு முறை இந்த மெகா ஆய்வு நடக்கும். மாணவர் வாசிப்பு, எழுதும் திறன் கண்காணிக்கப்படும். பள்ளிகளின் குறைகள், ஆசிரியர், அலுவலர் மீது தவறுகள் இருக்கும்பட்சத்தில் அதை திருத்திக்கொள்ள அவகாசம் அளிக்கப்படும். அதையும் மீறுவோர் மீது நடவடிக்கை பாயும்
என்றார்.

Post Top Ad