தமிழக பட்ஜெட் 2019 - உரை முழுத் தொகுப்பு ( PDF FILE) - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, February 8, 2019

தமிழக பட்ஜெட் 2019 - உரை முழுத் தொகுப்பு ( PDF FILE)







2019 -20ம் நிதி ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்...

வரி இல்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்தார் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

CPS ரத்து குறித்த சித்திக்  குழு அறிக்கை  அரசு பரிலித்து வருகிறது









* துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் 8வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார்

* பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

மக்களவை தேர்தல் காரணமாக முன்கூட்டியே பட்ஜெட் தாக்கல்

2019-20 ஆம் ஆண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ16,315 கோடியாக குறையும் - துணை முதலமைச்சர்

* வரி வருவாய் ரூ1,97,721 கோடியாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது - துணை முதலமைச்சர்

பட்ஜெட் உரையின் போது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் புகழாரம்.

 பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.28,757 கோடி ஒதுக்கீடு

அரசு ஊழியர் நலனுக்கு  ரூ.55,399 கோடி ஒதுக்கீடு


மாணவர்களுக்கு புத்தகப் பைகள் காலணிகள் நோட்டு புத்தகங்கள் உட்பட மாணவர்களுக்கு விலையில்லா திட்டங்கள் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படும் இதற்காக 2019 2020 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகள் 1,656.90கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


பள்ளி செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 33,519 ஆக குறைந்துள்ளது. சத்துணவு திட்டத்திற்கான காய்கறி, தாளிதப் பொருட்களுக்கான விலை சந்தை நிலவரத்திற்கு ஏற்ப உயர்த்தி வழங்கப்படும்.

சிறப்பு திட்டத்தின் மூலம் ஆதி திராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பால்வளத்துறைக்கு ரூ.258.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் ஆற்றங்கரையோரம் வசிக்கும் ஏழைகளுக்கு 38,000 குடியிருப்புகள் கட்டப்படும்.

ஒட்டுமொத்தமாக விவசாயத் துறைக்கு ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிறுவனங்களின் மறுகட்டமைப்பு தொடர்பான சொத்து பரிமாற்றங்களுக்கான பதிவுக்கட்டணம் அதிகபட்சமாக ரூ.3000 என நிர்ணயிக்கப்படும்.

வரிகள் மூலம் தமிழக அரசுக்கு ரூ.1,37,964 கோடி வருவாய் கிடைக்கும். வறுமை ஒழிப்பு திட்டத்திற்கு ரூ.1,031 கோடி, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டிற்கு ரூ.6,265 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எரிசக்தி துறைக்கு ரூ.18,560.77 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


மாணவர்களின் பயண கட்டண சலுகைக்காக ரூ. 766 கோடி ஒதுக்கீடு.

அரசு அலுவலர்கள் ஊதியத்திற்காக ரூ. 55,399.75 கோடி ஒதுக்கீடு

சத்துணவு திட்டத்திற்கு 1,772.12 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

கல்லூரி, பள்ளி விடுதி மானவர்களுக்கு உணவுக் கட்டணம் வழங்க 103.55 கோடி ஒதுக்கீடு.

பள்ளி மாணவர்கள் மிதிவண்டி திட்டத்திற்கு 138.48 கோடி ஒதுக்கீடு.

அம்மா இருசக்கர வாகன திட்டத்திற்கு இந்தாண்டு 250 கோடி நிதி ஒதுக்கீடு.

விவசயிகளுக்கு 50% மானிய விலையில் வேளான் இயந்திரங்கள் வழங்கப்படும்.

9,000+ சீருடை பணியாளர்கள் காலியிடங்கள் நிரப்பப்படும்.

* கஜா புயல் நிவாரணமாக ரூ.2,361.41 கோடி வழங்கப்பட்டு்ளது

* ஜெர்மன் வங்கி உதவியுடன் 2,000 பேட்டரி பேருந்துகள் வாங்கி இயக்கப்படும்

* சென்னை, கோயம்புத்தூர், மதுரையில் முதல்கட்டமாக 500 பேருந்துகள்

* சென்னை மெட்ரோ ரயில் மாதவரம் - கோயம்ேபடு - சோழிங்கநல்லூர் திட்டத்திற்கு ஜப்பான் நிதியுதவி

* மதுரை மாவட்டம் திருமங்கலத்தை தலைமையாக கொண்டு புதிய வருவாய் கோட்டம்

* கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்ட புதிய மாவட்டம் விரைவில் உருவக்கப்படும்

* ரூ.2,000 கோடியில் சென்னையில் வாகன நிறுத்த மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும்

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறைக்கு நடப்பாண்டில் ரூ403.76 கோடி ஒதுக்கீடு

மாநில வரி வருவாய் வளர்ச்சி 16 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்ப்பு - துணை முதலமைச்சர்

* ஜிஎஸ்டி வருவாயில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது - துணை முதலமைச்சர்

* ஜிஎஸ்டி இழப்பீடு தொகை மத்திய அரசிடம் இருந்து இதுவரை வரவில்லை - துணை முதலமைச்சர்

கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே புதிய வெள்ள தடுப்பணை கட்டப்படும் - துணை முதலமைச்சர்

* நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகளுக்கு ரூ284 கோடி ஒதுக்கீடு - துணை முதலமைச்சர்..

காவல்துறைக்காக ரூ8.084 கோடி, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு ரூ407.76 கோடி ஒதுக்கீடு - துணை முதலமைச்சர்

* காவல்துறையில் 9975 காலிப் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை - துணை முதலமைச்சர்..

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கு ரூ.1000 ஒதுக்கீடு

* ரூ.1,125 கோடியில் தேனி, சேலம், ஈரோட்டில் 250 மெகாவாட் மிதக்கும் சூரிய திட்டம்

* ரூ.2,350 கோடியில் 500 மெகாவாட் கடலாடி, மிக உய்ய சூரிய பூங்கா திட்டம்

* முதியோர் உதவித்தொகை, இலவச வேட்டி, வேலை உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு ரூ.3,958 கோடி ஒதுக்கீடு

* ரூ.284 கோடி மதிப்பில் வெள்ளத்தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்

* ஸ்ரீபெரும்புதூர் ஒரத்தூரில் அடையாறு உபநதியில் நீர்த்தேக்கம் அமைக்கப்படும்

* குறிஞ்சிப்பாடி வட்டத்தில் பரவனாற்று படுகை மறு சீரமைக்கப்படும்

* சிதம்பரம் வட்டம் பேரம்பட்டு அருகே கொள்ளிடம் ஆற்றில் வெள்ளத்தடுப்பு நீரொழுங்கி கட்டப்படும்

* பிச்சாவரம் அருகே உப்பனாற்றின் குறுக்கே நீரொழுங்கி அமைக்கப்படும்

* நில ஆதாரங்களை முறையாக திறம்பட பயன்படுத்த மாநில நலப்பயன்பாட்டு கொள்கை வடிவமைக்கப்படும்

* ஒன்றரை லட்சம் குடும்பங்களுக்கு வீட்டு மனை பட்டா

* தேசிய ஊராக வாழ்வாதார திட்டத்துக்கு ரூ.349.4 கோடி ஒதுக்கீடு

வீட்டு வசதி, நகர்ப்புற மேம்பாட்டுத்துறைக்கு ரூ.6,265.5 கோடி ஒதுக்கீடு

* ஊரக குறுந்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க  ரூ.172 கோடி ஒதுக்கீடு

* வறுமை ஒழிப்பு திட்டங்களுக்கு மொத்தம் ரூ.1,031.5 கோடி ஒதுக்கீடு

* 2019-20-ம் ஆண்டில் சாலை மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.1,142 கோடி ஒதுக்கீடு

* தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் 7,896-ல் இருந்து 5,198 ஆக குறைப்பு

* 2019-20-ம் நிதியாண்டில் விவசாயிகளுக்கு 2,000 சூரிய பம்ப் செட்டுகள் வழகங்ப்படும்

* ரயில்வே மேம்பால பணிகளுக்கு வரும் ஆண்டில் ரூ.726.6 கோடி ஒதுக்கீடு

* 2019-20-ம் ஆண்டுகளுக்கு நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்துறைக்கு ரூ.13,605 கோடி ஒதுக்கீடு

* பள்ளி கல்வித்துறைக்கு 2019-20-ம் ஆண்டில் ரூ.28,757.62 கோடி ஒதுக்கீடு

* தொடக்கநிலை வகுப்புகளில் நிகர மாணவர் சேர்க்கை விகிதம் 99.8 ஆக உயர்வு

* பள்ளி செல்லா குழந்தைகளின் எண்ணிக்கை 33,519 ஆக குறைந்துள்ளது

* இலவச பாடப்புத்தகங்கள், காலணிகள், புத்தகப் பைகள் வழங்க ரூ.1,657 கோடி ஒதுக்கீடு

* நபார்டு உதவியுடன் பள்ளிகளில் வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிப்பறைகள் கட்ட ரூ.381 கோடி ஒதுக்கீடு

* ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்திற்க ரூ.2,791 கோடி ஒதுக்கீடு

* முதல் முதல்முறையாக பட்டதாரி மாணவ, மாணவியருக்கு கல்வி கட்டணம் வழங்க ரூ.460 கோடி ஒதுக்கீடு

* மத்திய அரசின் திட்டங்களில் நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்துவிட்டது

* நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்ததால் மாநில அரசுக்கு நிதிச்சுமை அதிகரிப்பு

* சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 9,975 பேர் பணியமர்த்தப்படுவர்

* வேளாண்துறைக்கு ரூ.10,550 கோடி நிதி ஒதுக்கப்படும்

* பயிர்க்கடன் மீதான வட்டி தள்ளுபடிக்காக ரூ.200 கோடி ஒதுக்கீடு

* கால்நடை பராமரிப்பு துறைக்கு ரூ.1,252 கோடி ஒதுக்கீடு

* பால் வளத்துறைக்கு ரூ.258 கோடி ஒதுக்கீடு

* மீனவளத்துறைக்கு ரூ.928 கோடி ஒதுக்கீடு

* உணவு மானியத்துக்கு ரூ.6,000 கோடி ஒதுக்கீடு

* ஊரக வளர்ச்சி துறைக்கு ரூ.18,273 கோடி ஒதுக்கீடு

* 20,000 பசுமை வீடுகள் கட்டுவதற்கு ரூ.420 கோடி ஒதுக்கீடு

* கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, கே.பரமத்தியில் 282 குடியிருப்புகளுக்கு குடிநீர் திட்டம்

* பாசன மேலாண்மை நவீனமயமாக்கல் திட்டத்துக்கு ரூ.235 கோடி ஒதுக்கீடு

* நீர் ஆதார அமைப்புகளின் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ.811.6 கோடி ஒதுக்கீடு

* 2019-20-ம் ஆண்டு பட்ஜெட்டில் பாசனத்துறைக்கு ரூ.5,984 கோடி ஒதுக்கீடு

* கிராமங்களில் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த ரூ.1,200 கோடி ஒதுக்கீடு

* 2019-20-ம் ஆண்டில் 1.97 லட்சம் வீடுகள் கட்ட பட்ஜெட்டில் ரூ.266.16 கோடி ஒதுக்கீடு

* 1986 கி.மீ. பஞ்சாயத்து சாலைகள் ரூ.1,142 கோடியில் மேம்படுத்தப்படும்

* அண்ணா பல்கலை கழகத்தின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி

Post Top Ad