இவர்தான் ஆசிரியர்; கைதானாலும் மாணவர்களுக்கு பாடம் எடுத்த கடமை உணர்ச்சி: வைரலாகும் படம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, January 24, 2019

இவர்தான் ஆசிரியர்; கைதானாலும் மாணவர்களுக்கு பாடம் எடுத்த கடமை உணர்ச்சி: வைரலாகும் படம்




ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கைதான ஆசிரியர் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்ட இடத்துக்கு மாணவர்களை அழைத்து பாடம் நடத்தும் புகைப்படம் வெளியாகி பாராட்டைப் பெற்றுள்ளது.

"தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும், ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர். இதனால் அலுவலகப் பணிகளும், மாணவர்களுக்கு கற்பித்தலும் தடைபட்டிருப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.


போராட்டத்தை நோக்கி தள்ளப்பட்டுள்ள அரசு ஊழியர்கள் ஆசிரியர்களால் மாணவர்கள் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக பிரச்சாரம் செய்யப்படுகிறது. இதற்கு அரசாங்கமும் காரணம் என்பதை ஏன் பார்க்க மறுக்கிறார்கள் போராட்டம் நடத்த எங்களுக்கு ஆசையா என போராடும் தரப்பு கேள்வியாக உள்ளது.

ஆனால் ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தால் மாணவர்கள் படிப்பு பாதிக்கப்படுவதை எந்நாளும் விரும்ப மாட்டார்கள், இதற்கு உதாரணமாக இன்று வெளியாகியுள்ள புகைப்படம் ஒன்று வாட்ஸ் அப்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் கந்தர்வக்கோட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை போலீஸார் கைது செய்து அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்திருந்தனர். 

கந்தர்வகோட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு தனியார் கல்யாண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தாங்கள் கைது செய்யப்பட்டாலும் தங்களால் மாணவர் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்று எண்ணிய ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டு தாம் அடைக்கப்பட்டுள்ள இடத்திற்கு மாணவர்களை வரவழைத்து தமது மாணவர்களுக்கு பாடம் சம்பந்தப்பட்ட ஆலோசனைகளை வழங்கிக் கொண்டிருந்தார்.

அதில் கைதாகி போலீஸ் காவலில் இருந்த கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆங்கில ஆசிரியர் தெய்வீகன். அவர் தங்கள் போராட்டத்தால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதை உணர்ந்து 10 மற்றும் 9ம் வகுப்பு மாணவ தலைவர்களை அங்கு வரவழைத்தார். அவர்களிடம் இன்று மாணவர்களுக்கு நடத்த வேண்டிய பாடம் குறித்து விளக்கம் அளித்து அதனை வகுப்பில் உள்ள மாணவர்களுக்கு பாடமாக நடத்த அறிவுறுத்தினார். 

ஆசிரியர்கள் பெற்றோர்களைப்போன்றவர்கள், அவர்கள் மாணவர்கள் மீது அக்கறை இல்லாமல் போராட்டம் செய்து வருகின்றனர் என்ற கருத்து கிளப்பப்பட்டு வரும்நிலையில் ஆசிரியர் ஒருவரின் இந்த செயல் பார்ப்போரை நெகிழ வைத்துள்ளது. தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.


இதே போல் மற்ற வகுப்பு தலைவர்களையும் மண்டபத்திற்கு வரவழைத்த அவர் சக மாணவர்களுக்களுக்கான எழுத்துப் பயிற்சி மற்றும் இன்றைய பாடங்களை படிக்க அறிவுறுத்தி அனுப்பினார். போராட்டத்தில் ஈடுபட்டு சிறைபிடிக்கப்பட்டிருந்த நிலையிலும்கூட மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆசிரியர் கல்வி பணியாற்றியது காண்போருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது

Post Top Ad