முதலமைச்சருடன் ஆலோசனைக்குப்பின் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, January 26, 2019

முதலமைச்சருடன் ஆலோசனைக்குப்பின் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி




சென்னை மெரினாவில் சாரண, சாரணியர் அணிவகுப்பை ஏற்று மேடையில் உரையாற்றிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், எதிர்கால நீர்த்தேவையை கருத்தில் கொண்டு மரம் நடும் மாணவர்களுக்கு 5 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க தமிழக பள்ளிக்கல்வித்துறை பரிசீலித்து வருவதாக கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசுப்பள்ளிகளை மூட இருப்பதாக ஜாக்டோ- ஜியோ அமைப்பினரிடம் சிலர் தவறான தகவல்களை பரப்புவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.


வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது. ஏழை, எளிய மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப கேட்டுக்கொண்டார். குடியரசு தினத்தன்றும், பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேள்விக்கு, பொறுத்திருத்து பாருங்கள் என்று அமைச்சர் பதிலளித்தார். 

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமியை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்தார்.

ஆசிரியர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது குறித்தும், சாத்தியமுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது

அரசு தரப்பிலிருந்து போராட்டம் குறித்து இன்று முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post Top Ad