உங்களின் ஓட்டுனர் உரிமத்துடன் ஆதார் கார்டை இணைப்பது எப்படி? - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, January 14, 2019

உங்களின் ஓட்டுனர் உரிமத்துடன் ஆதார் கார்டை இணைப்பது எப்படி?





இந்தியாவில் சமீப காலங்களில் எல்லாவற்றுக்கும் ஆதார் கார்டு பயன்படுத்தப்படுகிறது. இந்திய குடியுரிமை பெற்ற அனைவருக்கும் மிகவும் அவசியமான அடையாள சான்றாக ஆதார் இருக்கிறது. சமீபத்தில் வெளியான அறிக்கையில், UIDAI மற்றும் மத்திய அரசு இணைந்து ஓட்டுனர் உரிமத்துடன் ஆதாரை இணைக்கும் வழிமுறையை கட்டாயமக்க திட்டமிட்டுள்ளன.

இதன் மூலம் இந்தியா முழுக்க அனைவரும் ஒற்றை ஓட்டுனர் உரிமம் மட்டுமே வைத்திருக்க வேண்டும் என்பதை அரசாங்கம் கடுமையாக செயல்படுத்த இருக்கிறது. ஆதாருடன் ஓட்டுனர் உரிமத்தை இணைப்பதன் மூலம் ஒருவரின் அனைத்து விவரங்களும் கிடைக்கும் என்பதால் நாடு முழுக்க பல்வேறு ஓட்டுனர் உரிமங்களை பெற முடியாத சூழல் ஏற்படும்.


ஓட்டுனர் உரிமம் அந்தந்த மாநிலம் அல்லது யூனியன் பிரேதசங்களின் சாலை போக்குவரத்து துறையால் வழங்கப்படுகிறது. இதனால் ஒவ்வொரு மாநிலத்திலும் ஆதாரை இணைப்பதற்கான வழிமுறை மாறும். எனினும், இதற்கான அடிப்படை அம்சங்கள் ஒன்று தான்.



ஒருவேளை நீங்களும் உங்களது ஓட்டுனர் உரிமத்துடன் ஆதாரை இணைக்க விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றலாம்:



தேவையானவை:

உங்களது ஓட்டுனர் உரிமம் மற்றும் ஆதார் கார்டு விவரங்கள் அவசியமாகும்

சீரான இணைய இணைப்பு



வழிமுறைகள்:

1 - உங்களது மாநில போக்குவரத்து துறை வலைதளம் செல்ல வேண்டும்

2 - வலைத்தளத்தில் 'Link Aadhaar' என்ற ஆப்ஷனை பார்க்கவும்

3 - இதில் 'Driving license' ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்

4 - இனி உங்களின் ஓட்டுனர் உரிம எண் பதிவு செய்து 'Get Details' ஆப்ஷனை க்ளிகி செய்ய வேண்டும்

5 - உங்களது ஓட்டுனர் உரிம விவரங்களை சரிபார்க்க வேண்டும்

6 - இனி உங்களது 12 இலக்க ஆதார் எண் பதிவு செய்ய வேண்டும்

7 - ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பரை பதிவிட வேண்டும்

8 - இனி 'Submit' பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்

9 - அடுத்து உங்களுக்கு ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் வரும்

10 - ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல்லை பதிவு செய்து வழிமுறையை நிறைவு செய்யலாம்.

Post Top Ad