7-வது ஊதியக்குழு - நிலுவைத்தொகையுடன் மாநில அரசின் ஆசிரியர்களுக்கும் நீட்டிப்பு: மத்திய அரசு ஒப்புதல் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, January 16, 2019

7-வது ஊதியக்குழு - நிலுவைத்தொகையுடன் மாநில அரசின் ஆசிரியர்களுக்கும் நீட்டிப்பு: மத்திய அரசு ஒப்புதல்


7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் மாநில அரசுகளின் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும், அரசு உதவி பெறும் தொழிற்கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் நீட்டிப்பு செய்ய மத்திய அரசு நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த புதிய ஊதியம் கடந்த 2016 ஜனவரி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் என்றும், இதனால், அரசுக்குக் கூடுதலாக ரூ.1,241.78 கோடி செலவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து மத்திய மனிதவளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

''7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் மாநில அரசுகளின் ஆசிரியர்களுக்கும், உதவிபெறும் தொழிற்கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்ற தனியார் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நேரடியாக 29 ஆயிரத்து 264 ஆசிரியர்கள், கல்வி நிறுவனப் பணியாளர்கள் பயன்பெறுவார்கள். ஒட்டுமொத்தமாக 3.5 லட்சம் ஆசிரியர்கள் பயன் பெறுவார்கள். இதன் மூலம் அரசுக்குக் கூடுதலாக ரூ.12,41 கோடி செலவாகும். 50 சதவீத நிலுவைத்தொகையை அரசு வழங்கும்.


பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர் சாதி பிரிவினருக்கு கல்வி,வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் அடுத்த கல்வி ஆண்டில் இருந்து நடைமுறைக்கு வருகிறது. இதன் மூலம் 900பல்கலை, 40 ஆயிரம் கல்லூரிகளில் மாணவர்களுக்கான இடங்கள் 25 சதவீதம் உயர்த்தப்படும்''.

இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்

Post Top Ad