அனைத்து கல்வித்துறை அலுவலகங்களுக்கும், 'பயோமெட்ரிக்' கருவி ஜனவரி 12ம் தேதிக்குள் பொருத்த உத்தரவு!! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, January 7, 2019

அனைத்து கல்வித்துறை அலுவலகங்களுக்கும், 'பயோமெட்ரிக்' கருவி ஜனவரி 12ம் தேதிக்குள் பொருத்த உத்தரவு!!





அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் உட்பட, அனைத்து கல்வித்துறை அலுவலகங்களுக்கும், 'பயோமெட்ரிக்' கருவி ஜனவரி 12ம் தேதிக்குள் பொருத்த உத்தரவு!!

அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் உட்பட, அனைத்து கல்வித்துறை அலுவலகங்களுக்கும், 'பயோமெட்ரிக்' கருவி வினியோகிக்கப்பட்டு வருவதால், 12ம் தேதிக்குள், அவற்றை பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசாணைவருகைப்பதிவு முறையை ஒழுங்குப்படுத்தும் வகையில், பள்ளி, கல்வித்துறை அலுவலகங்களில், பயோமெட்ரிக் கருவி பொருத்த, கடந்த அக்., மாதம் அரசாணை வெளியிடப்பட்டது.


இதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள, 7,726 அரசு, அரசு உதவிபெறும், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு, ஆதாருடன் இணைந்த, தலா, இரண்டு பயோமெட்ரிக் கருவிகள் வழங்கப்படவுள்ளன.


தமிழகத்தில், 32 மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள், 120 மாவட்ட கல்வி அலுவலகங்கள், 413 வட்டார கல்வி அலுவலகங்கள் மற்றும் வட்டார வள மையங்களுக்கும், தலா, ஒரு கருவி வீதம், 978 பயோமெட்ரிக் கருவிகள் வழங்கும் பணிகள் நடக்கின்றன.முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, இயக்குனர் ராமேஸ்வர முருகன், இது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.


அதில் கூறியிருப்பதாவது

பயோமெட்ரிக் கருவி, 'கூரியர்' மூலம் பள்ளிகளுக்கு அனுப்பப்படுகிறது. இதை பயன்படுத்தும் முறை குறித்து, 11ம் தேதிக்குள், வட்டார வாரியாக பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.

பள்ளிகளில் பொருத்தி, இதுகுறித்த அறிக்கையை, வரும், 12ம் தேதிக்குள், முதன்மை கல்வி அலுவலர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

Post Top Ad