School Morning Prayer Activities - 07.12.2018 - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, December 7, 2018

School Morning Prayer Activities - 07.12.2018



பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:





திருக்குறள் : 99

இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.

உரை:
இனிய சொற்கள் இன்பம் பயத்தலைக் காண்கின்றவன், அவற்றிற்கு மாறான வன்சொற்களை வழங்குவது என்ன பயன் கருதியோ?.

பழமொழி:

Eat to live: do not live to eat

வாழ்வதற்காக சாப்பிடு; சாப்பிடுவதற்காக வாழாதே

பொன்மொழி:

பிறர் குற்றங்களை மன்னிக்கும் குணம், குற்றம் இல்லாத நல்லவர்களிடம் மட்டுமே இருக்கும்.

- பாரதியார்

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1) 1 ஸ்கோர் என்றால் என்ன?

20 பொருட்கள்

2) நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் வருடம்?
லீப் வருடம்

நீதிக்கதை :

தங்க இறகு



பண்ணைபுரம் என்ற ஊரில் விவசாயி ஒருவன் இருந்தான். அவன் எவ்வளவு கடுமையாக உழைத்தாலும் அவனது வயலில் விளைச்சல் பெருகவே இல்லை. “விவசாயி கணக்குப் பார்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது’ என்ற பழமொழிப்படி பல ஆண்டுகளாகப் பாடுபட்டும்கூட அவன் வறுமையிலேயே வாடிக் கொண்டிருந்தான்.

ஒருநாள் வயலில் ஏர் உழுது விட்டு வரும் போது தகதகவென ஜொலித்த பறவை ஒன்று அங்கிருந்த மரத்தில் அமர்ந்திருந்தது. அதைப் பார்த்த விவசாயி, “இந்தப் பறவை நம் வயலைக் காக்கும் தேவதையாக இருக்கக் கூடும். இத்தனை நாள் நாம் இதை வணங்காமல் போனதால்தான் நம்முடைய வயலில் விளைச்சல் பெருகவில்லை. இன்று முதல் இதை நாம் வணங்குவோம்’ என்று தீர்மானித்தான்.

“”எனது வயலைக் காத்து வரும் தேவதையே! இவ்வளவு நாட்கள் உன்னைக் கவனிக்காமல் இருந்ததற்காக என்னை மன்னித்துவிடு. உனக்கு என் வீட்டில் இருந்து பழங்கள் எடுத்து வந்துள்ளேன். சாப்பிட்டு என்னை ஆசீர்வதிப்பாயாக,” என்று கூறி பாத்திரத்தை வைத்து விட்டுச் சென்றான் விவசாயி.


மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது பாத்திரத்தில் ஒரு தங்க இறகு இருந்தது. மகிழ்ச்சியுடன் அதை எடுத்துச் சென்றான் விவசாயி.

நாள்தோறும் மாலை வேளைகளில் விவசாயி பாத்திரத்தை வைத்துவிட்டு வருவான். மறுநாள் காலையில் ஒரு தங்க இறகு இருக்கும். இவ்விதம் மகிழ்ச்சியாகக் காலந்தள்ளிக் கொண்டிருந்த விவசாயி ஒருநாள் வெளியூருக்குச் செல்ல வேண்டியிருந்தது. தனது மகனைக் கூப்பிட்டு அவனிடம் பறவைக்கு பழம் வைத்து விட்டு வருமாறு கூறினான்.

விவசாயி மகனும் தந்தை சொல்லியவாறே அன்று மாலை பழங்களை வைத்து விட்டுச் சென்றான்.

மறுநாள் காலையில் வந்து பார்க்கும்போது அந்தப் பாத்திரத்தில் ஒரு தங்க இறகு இருந்தது. அதைப் பார்த்த விவசாயியின் மகன், “இந்தப் பறவையைப் பிடித்து தங்க இறகுகளை வேண்டிய மட்டும் பிய்த்துக் கொள்வோம். எப்படியும் பறவைக்கு தங்க இறகு முளைத்துவிடும். மீண்டும் பிய்க்கலாம்,’ என்று நினைத்து அவன் மறுநாள் ஒளிந்திருந்து பறவை பழம் சாப்பிடும் போது பிடித்துக் கொண்டான். அதன் இறகை பிய்க்க முயன்றபோது பறவை அவன் கண்களை குத்தி குருடாக்கி விட்டுச் சென்றது.


விவசாயியின் மகன் பேராசையின் காரணமாக பார்வையற்றவன் ஆனான். கிடைப்பதை கொண்டு திருப்தி அடையணும். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுதான்


இன்றைய செய்தி துளிகள் :

1.மேகதாது அணை கட்ட அனுமதி அளித்ததற்கு எதிரான தீர்மானம்: சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்

2.கஜா புயலால் பாதித்த 4 மாவட்டங்களுக்கு மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு

3.தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை நீடிக்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம் தகவல்

4.அரசு புறம்போக்கு நிலங்களில் இருப்பவர்களுக்கு மூன்று சென்ட் இலவச வீட்டுமனைப் பட்டா - அரசாணை வெளியீடு

5.உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்தை வீழ்த்தியது ஜெர்மனி.

Post Top Ad