School Morning Prayer Activities - 20.12.2018 - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, December 20, 2018

School Morning Prayer Activities - 20.12.2018




பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:




திருக்குறள் : 108

குறள் 108:
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

உரை:
ஒருவரர்முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச் செய்த அப்‌பொழுதே மறந்து விடுவது அறம் ஆகும்.

பழமொழி:

Experience is the best teacher

அனுபவமே சிறந்த ஆசான்

பொன்மொழி:

துன்பம் நேரும் காலத்தில் உறுதி என்னும் கடிவாளத்தால் மனதை இழுத்து பிடியுங்கள்.

-பாரதியார்

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :
School Morning Prayer Activities - 20.12.2018
1) உலக மக்கள் தொகை எந்த ஆண்டு 700 கோடியை எட்டியது?
2011

2) உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள நாடு?
சீனா

நீதிக்கதை :



தோட்டக்காரனும் குரங்கும்



அது ஒரு அழகிய கிராமம். அந்த கிராமத்தில் தோட்டக்காரன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தினமும் தோட்டத்தில் உள்ள செடி கொடிகளுக்கு தண்ணிர் ஊற்றி வந்தான். அவன் தண்ணிர் ஊற்றும்போதெல்லாம் அங்கு சில குரங்குகள் வந்து விளையாடும்.

பல வருடங்கள் அங்கேயே இருந்ததால் தோட்டக்காரனும் குரங்கும் நண்பர்களாயிருந்தன. தோட்டக்காரன் செய்யும் காரியங்களைப் பார்த்துப் பார்த்து குரங்குகளும் அப்படியே செய்து வந்தன.

ஒருமுறை தோட்டக்காரன் பக்கத்து ஊருக்குப் போக வேண்டியிருந்தது. குரங்குகளை அழைத்து விஷயத்தைச் சொன்னான்.

குரங்குகளுக்கு சந்தோஷம். ஆனால், அவற்றுக்கு ஒரு பிரச்னை. எந்தச் செடிக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்றுவது என்று தெரியவில்லை.

''அது ஒண்ணும் பெரிய பிரச்னயில்லை. வேர் பெரியதாக இருந்தால் நிறைய தண்ணீர் ஊத்துங்க. சிறிய வேரா இருந்தால் கொஞ்சமா தண்ணீர், ஊத்துங்க'' என்று யோசனை சொன்னான்.

வெளியூர் போய் திரும்பி வந்து தோட்டத்தப் பார்த்த தோட்டக்காரனுக்கு அதிர்ச்சி. அத்தனை செடிகளும் பிடுங்கப்பட்டு காய்ந்து கிடந்தன. ''என்னாச்சு?'' என்றான் தோட்டக்காரன்.

''வேர் பெருசா இருக்கா, சின்னதா இருக்கானு பார்க்கிறக்காக, செடியெல்லாம் பிடுங்கினோம்'' என்றன குரங்குகள்.

நீதி: புத்தியில்லாதவர்களிடம் பொறுப்பை கொடுப்பது, புத்தியில்லாத செயல்.

இன்றைய செய்தி துளிகள் :
School Morning Prayer Activities - 20.12.2018
1) கற்றலில் ஆர்வம் ஏற்பட அரசுப்பள்ளிகளில் பிளஸ்1 பயிலும் மாணவர்களுக்கு ‘ஸ்கோப்’ திட்டம்

2) மெல்ல கற்கும் மாணவர்கள் அதிகமாக இருக்கும் பள்ளிகளின் பட்டியல் வழங்க உத்தரவு

3) இந்திய ராணுவத்தில் புதிய நவீன தொழில்நுட்பங்கள், ரோபோக்களை புகுத்த திட்டம்..!

4) GSLV- F11 ராக்கெட் உதவியுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது GSAT-7A

5) ஐபிஎல் 12வது சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தியை 4 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஏலம் எடுத்தது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

Post Top Ad