ONE PLUS 6T இன் கூகுள் லென்ஸ்: உலகை புது கோணத்தில் அனுபவிக்கலாம்.! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, December 4, 2018

ONE PLUS 6T இன் கூகுள் லென்ஸ்: உலகை புது கோணத்தில் அனுபவிக்கலாம்.!





ஒன்பிளஸ் நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்துள்ள ஒன்பிளஸ் 6டி பிரீமியம் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. how make the most of oneplus 6t google lens camera mode.
ஒன்பிளஸ் நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்துள்ள ஒன்பிளஸ் 6டி பிரீமியம் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. அட்டகாசமான சிப்செட் மற்றும் இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேன்னிங் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.


சிறந்த தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள OLED டிஸ்பிளே மற்றும் அதிகப்படியான ரேம் சேவையுடன் மிக வேகமான மல்டிடாஸ்கிங் பயன்பாட்டைப் பயனருக்கு ஒன்பிளஸ் 6டி வழங்குகிறது.


ஒன்பிளஸ் 6டி கேமரா
ஒன்பிளஸ் இன் கேமரா சேவை அனைவராலும் பாராட்டப்பட்டது, ஒன்பிளஸ் நிறுவனம் எப்பொழுதும் அதன் தயாரிப்பில் சிறந்த கேமரா சேவை பயன்பாட்டை வழங்குவதற்குப் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதேபோல் தற்பொழுது ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனில் மிரட்டலான கேமரா சேவையை அந்நிறுவனம் வழங்கியுள்ளது.

ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனில் ஆற்றல் மிகுந்த கேமரா ஹார்டுவேர் பொருத்தப்பட்டுள்ளது. மிரட்டலான புகைப்பட அனுபவம், 4k வீடியோ ரெகார்டிங் மற்றும் இருட்டில் சிறந்த புகைப்பட சேவைகள் எனப் பல சேவைகளை ஒன்பிளஸ் 6டி வழங்குகிறது.



ஏ.ஐ கூகுள் லென்ஸ்
ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனின் கேமரா செயலியுடன் கூகுள் லென்ஸ் சேவை இணைக்கப்பட்டுள்ளது. கூகுள் லென்ஸ் சேவையை ஆக்டிவேட் செய்வதற்கு, இடது கீழ் மூலையில் இருக்கும் லென்ஸ் ஐகானை கிளிக் செய்தல் மட்டும் போதும். கூகுள் லென்ஸ் ஏ.ஐ மற்றும் கணினி தொலைநோக்கு அறிக்கை மூலம் கேமராவின் வழி அது புத்தகமா, காலணியா, பைக்கா அல்லது என்ன பொருள் என்பதை மிகத் துல்லியமாக சொல்லிவிடுகிறது.

ஆக்சிஜன் OS உடன் கூகுள் லென்ஸ் சேவை
ஒன்பிளஸ் 6டி இல் வழங்கப்பட்டிருக்கும் ஆக்சிஜன் OS இயங்குதளத்தினால் கூகுள் லென்ஸ் சேவை மிகத் துல்லியமாகவும் சிறப்பாகவும் செயல்படுகிறது. ஒன்பிளஸ் 6டி இன் கூகுள் லென்ஸ் சேவையை முற்றிலும் உணர உங்களின் மொபைல் போனை ஏதேனும் பொருளின் மீது காட்டுங்கள். அந்தப் பொருளின் முழு தகவல் மற்றும் விபரங்களை ஒன்பிளஸ் 6டி உங்களுக்கு வழங்கிவிடும்.

இனி ஈஸியா டிராவல் செய்யலாம்
டிராவல் செய்வது என்பது வாழ்க்கையில் ஒரு மனிதன் செய்துபார்க்க வேண்டிய முக்கியமான அனுபவம். ஆனால் மொழி தெரியாமல் வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்குச் செல்லும் பொழுது சில மொழி சிக்கலை சந்திக்க நேரிடும். இனி அந்த கவலை வேண்டாம். ஒன்பிளஸ் 6டி இன் கூகுள் லென்ஸ் சேவை மூலம் விலாசப் பலகை, சைன் போர்டு மற்றும் பிறமொழி எழுத்துக்களை எளிதில் உங்களுக்குப் புரியும் மொழியில் மொழிபெயர்த்துக்கொள்ளம்.
இன்ஸ்டன்ட் காலெண்டரில் சேவை
ஏ.ஐ சேவையுடன் செயல்படும் கூகுள் லென்ஸ் சேவை மூலம் பத்திரிகையில் உள்ள நாள் மற்றும் தேதியை ஸ்கேன் செய்தல் போதும், உங்களின் காலெண்டரில் உடனே சேவ் செய்துகொள்ளும். இனி நீங்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியின் விபரங்களை நிச்சயம் மறக்காதபடி ஒன்பிளஸ் 6டி உங்களுக்கு உதவுகிறது.

கியூ.ஆர், பார்க்கோடு & விசிட்டிங் கார்டு ஸ்கேனர்
கூகுள் லென்ஸ் சேவை தற்பொழுது ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனுடன் இணைக்கப்பட்டுள்ளதால், இனி கியூ.ஆர் கோடுகளை ஸ்கேன் செய்ய உங்களுக்குத் தனி செயலி தேவைப்படாது. ஒன்பிளஸ் 6டி மிக எளிதாக கேமரா மூலம் உங்களின் தேவைகளை பூர்த்தி செய்கிறது.

Post Top Ad