அரசு பள்ளிகளில் வருகை பதிவுக்கு 'செயலி' கட்டாயம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, December 1, 2018

அரசு பள்ளிகளில் வருகை பதிவுக்கு 'செயலி' கட்டாயம்

அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளும், மாணவர்கள் வருகை பதிவுக்கு, 'ஆன்ட்ராய்டு ஆப்' பயன்படுத்த வேண்டும்' என பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


மத்திய, மாநில அரசுகளின் உதவிகளை பெறும் பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், அதிக எண்ணிக்கையில் கணக்கு காட்டி, முறைகேடாக உதவிகள் பெறுவதாக புகார்கள் எழுந்தன.

முறைகேடுகளை தடுக்கும் வகையில் மாணவர்கள் வருகை பதிவுக்கு, 'ஆண்ட்ராய்டு ஆப்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.மத்திய அரசின் ஒருங்கிணைந்த கல்வி திட்டமான, 'சமக்ரசிக் ஷா' திட்டத்தில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கல்வி மேலாண்மை தகவல் திட்டத்தில் உள்ள, மாணவர்களின் விபரங்களை பயன்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

எனவே, மாணவர்களின் வருகையை சரியாக பதிவு செய்யும் வகையில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில், TNSCHOOLS என்ற, 'ஆன்ட்ராய்டு ஆப்' வசதியை, கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துமாறு, அனைத்து மாவட்ட பள்ளிகளுக்கும், பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post Top Ad