பள்ளிகளில் பிற மொழி பயிற்சி மத்திய அரசு உத்தரவு!!! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, December 1, 2018

பள்ளிகளில் பிற மொழி பயிற்சி மத்திய அரசு உத்தரவு!!!






பள்ளிகளில், தமிழ், ஹிந்தி உள்பட, ஐந்து மொழிகளில் பயிற்சி தர வேண்டும்' என மத்திய மனிதவள மேம்பாட்டு துறை உத்தரவிட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி, இந்திய அலுவல் மொழிகளாக, 22 மொழிகள் தேர்வு செய்யப்பட்டு, அவை அட்டவணைபடுத்தப் பட்டுள்ளன. தமிழ், ஹிந்தி, கன்னடம், உருது, காஷ்மீரி, தெலுங்கு உள்ளிட்ட, இந்த மொழிகள், மாநில ஆட்சி மொழியாகவும் திகழ்கின்றன.இந்த மொழிகளை, நாடு முழுவதும் பிரபலப்படுத்தும் வகையில், மத்திய அரசு, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில், அனைத்து பள்ளிகளிலும், ஏதாவது ஐந்து அலுவல் மொழிகளை, ஒவ்வொரு வாரமும் பயிற்றுவித்து, மாணவர்களுக்கு பிறமொழிகளையும் பரிட்சயமாக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இதுதொடர்பாக, 'பாஷா சங்கம்' என்ற, மொழி மேம்பாட்டு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் சார்பில், சி.பி.எஸ்.இ., மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கும், மாநில பள்ளி கல்வி துறைக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.அதில், மாணவர்களிடையே பிறமொழி அறிவையும் வளர்க்கும் வகையில், குறைந்தபட்சம், ஐந்து மொழிகளில், முக்கிய வார்த்தைகளை கற்றுத் தர அறிவுறுத்தப்பட்டுள்ளது. தினமும், ஒரு மொழியை தேர்வு செய்து, அதில் உள்ள முக்கியமான, ஐந்து சொற்றொடர்களை, பள்ளி பிரார்த்தனை கூட்டத்தில் வாசிக்க வேண்டும். இந்த வழக்கத்தை பின்பற்றி, சாதனை செய்யும் பள்ளிகளுக்கு, விருதுகள் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.மொழி பயிற்சி கையேடுகள், மத்திய அரசின்,epathshala.gov.inஎன்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.

Post Top Ad