மாணவர்களுக்கு புதிய அனுபவம் தருகிறது பள்ளி பரிமாற்று திட்டம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, December 5, 2018

மாணவர்களுக்கு புதிய அனுபவம் தருகிறது பள்ளி பரிமாற்று திட்டம்





பள்ளி பரிமாற்றத் திட்டத்தால் கிராமப்புற மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.ஒருங்கிணைந்த கல்வி திட்டம் சார்பில், பள்ளிப் பரிமாற்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் கிராமப்புற பள்ளியை சேர்ந்த மாணவர்கள், நகர்ப்புற பள்ளியிலும், நகர்ப்புற மாணவர்கள் கிராமப்புற பள்ளியிலும் கல்வி கற்பார்கள்.இந்த ஆண்டு ஒட்டர்பாளையம் நடுநிலைப்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர்களும். எஸ்.எஸ்.குளம் அரசு மேல்நிலைப்பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவர்களும் பள்ளி பரிமாற்றத்திட்டத்தில் சேர்க்கப்பட்டனர்.இதையடுத்து ஒட்டர்பாளையம் பள்ளி மாணவ, மாணவியர், 20 பேர் கடந்த, 29ம் தேதி எஸ்.எஸ்.குளம் மேல்நிலைப் பள்ளிக்கு சென்றனர். அங்குள்ள வளங்களை கண்டறிந்தனர். அங்குள்ள மாணவ, மாணவியருடன் கலந்துரையாடினர்.அப்பள்ளியில் உள்ள ஆய்வகம், கம்ப்யூட்டர் மையம் ஆகியவற்றை பார்த்தனர். இதையடுத்து அந்த பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவ, மாணவியர் நேற்று ஒட்டர்பாளையம் நடுநிலைப்பள்ளிக்கு வந்தனர்.மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சியில், வட்டார கல்வி அலுவலர் ரங்கராஜ் பேசுகையில், ''மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி புதிய விசயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். கற்றல் குறித்து ஆர்வம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்,'' என்றார்.தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன் பேசுகையில், ''புதிய அனுபவத்தை இத்திட்டம் தந்திருப்பதால் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்,'' என்றார்.எஸ்.எஸ்.குளம் பள்ளி ஆசிரியர்கள் பழனிச்சாமி, சகாயராஜ், ஒட்டர்பாளையம் பள்ளி ஆசிரியை மணிமேகலை உள்பட பலர் பங்கேற்றனர்.

Post Top Ad