நலத்துறை பள்ளிகள் இணைப்பு: செங்கோட்டையன் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, December 15, 2018

நலத்துறை பள்ளிகள் இணைப்பு: செங்கோட்டையன்


நலத்துறை பள்ளிகளை, பள்ளிக்கல்வித்துறையுடன் இணைப்பது குறித்து, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று முடிவு எடுக்கப்படும்,'' என, அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.ஈரோட்டில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:அரசு தேர்வுத்துறை, சென்னையை தலைமையிடமாக கொண்டு, ஏழு மண்டலங்களில் மட்டும் செயல்பட்டு வந்தது.


தற்போது, மாணவர்கள், தனித்தேர்வர்கள் நலன் கருதி, தமிழகத்தில் உள்ள, 32 மாவட்டங்களிலும், உதவி இயக்குனர் தலைமையில், அரசுத்தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகம் செயல்பட உள்ளது. இந்த அலுவலகத்தில், உதவி இயக்குனர் தலைமையில், 10 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.நலத்துறையின் சார்பில், ஆதிதிராவிடர், கள்ளர், பிற்படுத்தப்பட்டோர் நலப்பள்ளிகளில், அடிப்படை கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. எனவே,நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளி களை, பள்ளிக் கல்வித்துறையுடன்இணைக்க, கோரிக்கை எழுந்துள்ளது.

இது தொடர்பாக, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, அமைச்சரவை கூட்டத்தில் உரிய முடிவு செய்து, பள்ளிக்கல்வித்துறையுடன் இணைப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும்.இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்

Post Top Ad