ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை -அமைச்சர் செங்கோட்டையன் தகவல்! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, December 10, 2018

ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை -அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!


இந்தியாவில் முதன்முறையாக பேஸ் ரீடிங் எனப்படும் மாணவர்களின் முகங்களோடு கூடிய வருகைப்பதிவேடு முறையை சென்னை அசோக் நகர் அரசுப்பள்ளியில் அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசு நீட் தேர்வு பயிற்சி மையத்தில் படித்த 4 பேர் மட்டுமே மருத்துவ படிப்பிற்கு தேர்வானதற்கு அவசர கோலத்தில் பயிற்சி அளித்ததே காரணம் என்று கூறியுள்ளார். வரும் ஆண்டுகளில் குறைந்தபட்சம் 500 மாணவர்களாவது தேர்வார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் தற்போது 413 நீட் தேர்வு பயிற்சி மையங்களில் 26,000 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர் என அவர் தகவல் அளித்துள்ளார். அரசு பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டில் 4 வகையான வண்ண சீருடைகள் அறிமுகம் செய்யப்படுகிறது என்றும், அரசு பள்ளியில் பயிலும் 11 லட்சம் மாணவர்களுக்கு டேப் வழங்கப்படும் என செங்கோட்டையன் கூறினார்.


இதனை தொடர்ந்து பாலிதீன் பொருட்களை பயன்படுத்த கூடாது என மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கையில் அரையாண்டு வினாத்தாள் எதுவும் திருப்படவில்லை என்று கூறிய அவர், கதவை உடைத்த மாணவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் அளித்துள்ளார். 33 அரசுப்பள்ளிகளில் ஒரு மாணவர்கள்கூட இல்லை, 1324 அரசுப்பள்ளிகளில் ஒன்பதுக்கும் குறைவான மாணவர்களே பயின்று வருகின்றனர் என்றும், பள்ளிகளை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், வழக்குகளை முடித்து கொடுத்தால் உடனடியாக பணியிடங்களை நிரப்ப தயாராக இருப்பதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

Post Top Ad