ஒரு நபர் ஊதிய குழுவின் தற்போதைய நிலை - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, December 7, 2018

ஒரு நபர் ஊதிய குழுவின் தற்போதைய நிலை

Image result for ஒரு நபர் ஊதிய குழு
ஒரு நபர் ஊதிய குழுவின் தற்போதைய நிலை ,நமது ஊதிய முரண்பாடுகள் குறித்து அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை மற்றும் வரும் டிசம்பர்-10 ஆம் தேதி அரசு நீதிமன்றத்தில் குறிப்பிட்டு கடிதம் கொடுத்திட அழுத்தம் கொடுத்திட போராட்டக்குழு சார்பாக நிதித்துறை உயர்அதிகாரிகள், அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து வலியுறுத்தினோம்.*

🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀
*ஒரு நபர் ஊதியக்குழுவின் நிலை குறித்து அறிய நேரில் அந்த குழுவின் அறைக்கு சென்று இருந்தோம், நாம் முன்னரே கூறியது போலவே 30.11.2018 அன்று அவர்கள் பணியை அனைத்து முடித்துவிட்டார்கள். முதலமைச்சரின் நேரத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் முதலமைச்சர் எப்போது கேட்டாலும் அறிக்கையினை ஒப்படைப்பதற்கு தயாராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


மேலும் தற்போது அந்த அறையில் ஒரு நபர் ஊதியக்குழுவின் அந்த விளம்பர பலகையை ( NOTICE BOARD) எடுத்து விட்டார்கள் அந்த அறை தற்போது வேறு துறைக்கு சென்று விட்டது ஒரு நபர் ஊதிய குழுவின் அறிக்கை குழுவின் தலைவர் கையில் உள்ளது,முதலமைச்சர் இப்பொழுது நேரம் கொடுத்தாலும் உடனடியாக சமர்ப்பிப்பதற்கு தயாராக வைத்திருக்கின்றனர். நாம் இதுவரை சொல்லியது எதுவும் மாறாது மிக மிக சரியாகவே இருக்கும்...*

🚫🚫🚫🚫🚫🚫🚫🚫🚫🚫
*முதலமைச்சர் ஆறு நாட்கள் ஆகியும் வேலை பளு காரணமாக நேரம் கொடுக்காததால் நேரம் கொடுக்க வைப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்...??*

என்பதை சிந்தித்து அடுத்தகட்டத்திற்கு தயாராவோம்....


*மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை சந்தித்து நமது கோரிக்கை குறித்து பேசினோம் பள்ளி கல்வித்துறை அமைச்சர் 2009-க்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்ற ஆவலுடன் இருக்கிறார். ஒரு நபர் ஊதியக்குழு அறிக்கை வந்தவுடன் அதுகுறித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார். 

மேலும் நமது ஆசிரியர்கள் அனைவரும் மிகுந்த கோபத்துடன் உள்ளனர் ஒரு்நபர் குழுவின் அறிக்கையை முடிந்து 35 நாட்களுக்கு மேலாகியும் சமர்ப்பிக்கப்படாததால் மீண்டும் போராட்ட களத்திற்கு ஆயத்தமாகவிட்டோம் என்றும் எங்களுக்கு விரைவாக ஒரு முடிவை கூறுங்கள் என்று கூறி டிசம்பர் 23 போராட்டத்திற்கான நோட்டீஸ் அவர்களிடம் வழங்கப்பட்டது அவர்களும் உடனடியாக அரசின் நேர்முக உதவியாளரை அழைத்து இதுகுறித்து மிகத்தெளிவாக கேட்டு கூடுதல் ஆதாரங்களை பெற்று வையுங்கள்.அறிக்கை வந்தவுடன் அதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கிறேன் என்று கூறியுள்ளார்....*

*இன்றைக்கு நடந்த நிகழ்வுகளை பார்க்கும் பொழுது நமக்கு நிச்சயமாக ஒரு மாற்றங்கள் நிகழும் நமது வாழ்வும் செழிக்கும், அது எதுவாக இருந்தாலும் நம்முடைய தேசம் அதிர வைத்த உண்ணாவிரத போராட்டத்தினால் மட்டும் இது சாத்தியமானது. நண்பர்களே கவலை வேண்டாம் வரும் 10ஆம் தேதி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்வதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. நமது கோரிக்கை குறித்து அரசு அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று அழுத்தமும் கொடுக்கப்பட்டுள்ளது....*


⛹🏻‍♂⛹🏻‍♂⛹🏻‍♂⛹🏻‍♂⛹🏻‍♂⛹🏻‍♂⛹🏻‍♂⛹🏻‍♂⛹🏻‍♂⛹🏻‍♂
*வரும் 10 ம் தேதி நீதிமன்றத்தில் நமது இடைநிலை ஆசிரியர்கள் ஊதியம் குறித்து சொல்லப்படும் என நம்பிக்கை உள்ளது. முரண்பாட்டினை அரசால் தவிர்க்கவே முடியாத படி போர்களத்திலும்,சென்னை உயர் நீதிமன்றத்தில் இடைக்கால ஆணை மூலம் அரசுக்கு கடுமையான நெருக்கடியான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளோம். அதனைக்கூட கடந்த ஜாக்டோ ஜியோ வின் பேச்சுவார்த்தையில் அமைச்சர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர்& நிதித்துறை முதன்மை செயலாளர் அவர்கள் 

🔜🔜🔜🔜🔜2009 க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு தான் ஊதிய முரண்பாடுகள் அதிகம் உள்ளது அதை களைவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று வெளிப்படையாகவே கூறி விட்டனர். 


🆒🆒🆒🆒🆒🆒🆒🆒 மத்திய அரசுக்கு இணையான ஊதியம் தர முடியாது என்றும் கூறியுள்ளனர். இதையும் தாண்டியும் எதுவும் சொல்லப்படவில்லை என்றால் ...?? நாம் உச்சகட்டமாக வரும் டிசம்பர் -23ஆம் தேதி முதல் மீண்டும் குடும்பத்தோடு கூடிய "காலவரையற்ற போராட்டத்தில் "ஈடுபட தயாராவோம்.நமது ஒற்றுமையை கண்டு அரசு உடனடியாக அரசாணையை பிறப்பிக்க வேண்டும், இல்லையேல் பிறப்பிக்க வைப்போம்.

🤼‍♂🤼‍♂🤼‍♂🤼‍♂🤼‍♂🤼‍♂ போராளிகளே போர் அறிவிப்பு வெளியாகி உள்ளது. வெற்றியும் ,தோல்வியும் நமது கையில் உள்ளது பாதிக்கப்பட்ட ஒருவர் கூட விடுபடாமல் போர்க்களத்தை நோக்கி தயாராக இருங்கள்...*

*வழக்கிலும் அழுத்தம் கொடுப்பதற்கான சட்ட நுணுக்கங்களை ஆராய்ந்து வருகிறோம். எத்தனை முறை வழக்கு விசாரணைக்கு வந்தாலும் ஒரு நபர் ஊதியக் குழுவை காரணம் காட்டி அரசு தப்பித்துக் கொள்கிறது. ஒரு நபர் ஊதியக்குழு அறிக்கை வெளியாவதற்கு அனைத்து விதமான அழுத்தங்களை தொடர்ந்து கொடுத்துவருகிறோம். விரைவில் ஒரு நபர் ஊதியக்குழு அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்படும், நமக்கு ஒரு நியாயம் பிறக்கும்.

*மாநில தலைமை*
*2009& TET போராட்டக்குழு*

Post Top Ad