விடுமுறை நாட்களில் கஜாபுயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் வழங்கி வரும் வட்டாரக் கல்வி அலுவலர் மருதநாயகம்.. - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, December 2, 2018

விடுமுறை நாட்களில் கஜாபுயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் வழங்கி வரும் வட்டாரக் கல்வி அலுவலர் மருதநாயகம்..


திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் வட்டாரக்கல்வி அலுவலர் மருதநாயகம் தலைமையில் ஆசிரியர்கள் பள்ளி மாணவர்கள்  விடுமுறை நாட்களில்  கஜாபுயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள கிராமங்களில்    வீடு வீடாக சென்று நிவாரப் பொருட்களை வழங்கினர்.


 இது குறித்து மணிகண்டம்  வட்டாரக் கல்வி அலுவலர் மருதநாயகம் கூறியதாவது:

கஜா புயலினால் தஞ்சை,திருவாரூர்,நாகை,புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பேரழிவு ஏற்பட்டது..இச்செய்தி அறிந்தவுடன் என் மனம் வேதனை அடைந்தது.எனவே கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களின் துயர் துடைக்கும் வகையில் தஞ்சைப் பகுதியில் அலுவலக வேலை நேரம் முடிந்த பிறகு இரவு நேரங்களில் அப்பகுதியில் உள்ள நண்பர்களுடன் களப்பணியில் ஈடுபட்டேன்..

அதன் பிறகு புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் தொகை குறைவாக உள்ள பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க முடிவெடுத்து எனது ஒன்றியத்தில் பணிபுரியும் ஆசிரியர்களோடு இங்கு வந்தேன்..அதன்படி புதுக்கோட்டை மாவட்டம்  திருமலைராயசமுத்திரம் ஊராட்சி ,மேட்டுபட்டி அருகே உள்ள உடையாநேரி கிராம மக்களுக்கு தார்ப்பாய்,கைலி,வாட்டர் பாக்கெட்,பிஸ்கெட் ,சாப்பாடு வழங்கினோம்..

பின்னர் ரெங்கம்மா சத்திரம் அருகே உள்ள காமராஜர் பகுதி மக்களுக்கு சாப்பாடு,பிரட் வழங்கினோம்...பின்னர்நார்த்தாமலை பொம்மாடி மலை அருகே உள்ள இந்திராகாலனி,சமத்துவபுரம் மக்களுக்கு பிஸ்கட்,சேமியா பாக்கெட்,கோதுமை மாவு போன்ற பொருள்களை வழங்கினோம்..இது போன்ற பணியில் ஈடுபடும் பொழுது மனம் நிறைவாக உள்ளது..

அடுத்த வாரத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் வேறு ஏதாவது கிராமத்திற்கு கூடுதல் நிவாரப் பொருட்களை பெற்று வந்து களப்பணியில் ஈடுபட உள்ளதாகவும் கூறினார்.

நிவாரணப்பணியில்  சமயபுரம்  எஸ்.ஆர்.வி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் துளசிதாசன் அறிவுறுத்தலின் பேரில் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள்  11 பேர் தன்னுடன் பயிலும் மாணவர்களிடம் நிதி வசூல் செய்து அப்பணத்தில் பொருட்களை    வாங்கி வந்து களப்பணி ஆற்றியது  குறிப்பிடத்தக்கது..


நிவாரணப் பணியில் தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கழக மாநில பொதுச்செயலாளர் செல்வம்,அருவாக்குடி தலைமைஆசிரியர் ஆரோக்கியராஜ்,எடமலைப்பட்டி நல்லாசிரியர் புஷ்பலதா,ரயில்வே துறையை சேர்ந்த பாலாஜி, புதுக்கோட்டை மாவட்ட சி.பி.எம் மாதர் சங்க மாவட்டச் செயலாளர் சலோமி,பொன்மாரி மெட்ரிக் பள்ளி தாளாளர் சந்திரா ரவீந்திரன் ஆகியோர் ஈடுபட்டனர்.. 

நிவாரணப்பொருட்களை சர்வீஸ் டூ சொசைட்டி அமைப்பைச் சேர்ந்த ரவி சொக்கலிங்கம் மற்றும் திருச்சியைச் சேர்ந்த ஆசிரியர்கள் தன்னார்வலர்கள் அனுப்பி இருந்தனர்..

Post Top Ad