4.50 லட்சம் பட்டதாரிகள் எழுதிய குரூப்-2 முதல்நிலைத் தேர்வு முடிவு வெளியீடு: ஒரே மாதத்தில் வெளியிட்டு டிஎன்பிஎஸ்சி சாதனை - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, December 18, 2018

4.50 லட்சம் பட்டதாரிகள் எழுதிய குரூப்-2 முதல்நிலைத் தேர்வு முடிவு வெளியீடு: ஒரே மாதத்தில் வெளியிட்டு டிஎன்பிஎஸ்சி சாதனை




4.50 லட்சம் பட்டதாரிகள் எழுதிய குருப்-2 முதல்நிலைத் தேர்வு முடிவை ஒரே மாதத்தில் வெளி யிட்டு டிஎன்பிஎஸ்சி சாதனை புரிந்துள்ளது. மிகக் குறுகிய காலத்துக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவது டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

நகராட்சி ஆணையர் (கிரேடு-2), சார்-பதிவாளர் (கிரேடு-2), உதவி பிரிவு அதிகாரி, உதவி தொழிலாளர் ஆய்வாளர், சிறைத்துறை நன்ன டத்தை அதிகாரி, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு விதமான பதவிகளில் 1,199 காலியிடங்களை நிரப்பும் வகையில் குருப்-2 முதல்நிலைத் தேர்வுக்கான அறி விப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிட்டிருந்தது. பட்டப் படிப்பை அடிப்படை கல்வித் தகுதியாக கொண்ட இத்தேர்வுக்கு 6 லட்சத்து 26 ஆயிரம் பேர் ஆன் லைன் மூலமாக விண்ணப்பித்தனர்.ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட படி, முதல்நிலைத் தேர்வானது கடந்த நவம்பர் 11-ம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடந்தது. 4.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வெழுதினர். இந்த நிலையில், தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிட்டது. அடுத்த கட்ட தேர்வான முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர் களின் பதிவெண்கள் இணையதளத் தில் வெளியிடப்பட்டுள்ளன.

தேர்வு முடிவுகளை ஒரே மாதத்தில் வெளி யிட்டு டிஎன்பிஎஸ்சி சாதனை புரிந்துள்ளது. பொதுவாக தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதற்கு நான்கைந்து மாதங்கள் வரை ஆகும். ஆனால், தற்போது தேர்வு முடிவுகள்மிகக்குறுகிய காலத் துக்குள் வெளியிடப்பட்டிருப்பது டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் இதுவே முதல்முறை.‘‘ஒரு காலியிடத்துக்கு 10 பேர்’’ என்ற விகிதாச்சார அடிப்படையில் முதன்மைத்தேர்வுக்கு விண்ணப்ப தாரர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள னர். அந்த வகையில், காலியிடங் களின் எண்ணிக்கை 1,199 ஆக இருப்பதால் ஏறத்தாழ 12 ஆயிரம் பேர் முதன்மைத்தேர்வுக்கு அனு மதிக்கப்பட்டிருக்கலாம். ஒரே கட் ஆப் மதிப்பெண் பெற்றிருப் பவர்களும் அழைக்கப்படுவதால் இந்த எண்ணிக்கை சற்று அதிக மாக இருக்கலாம்.
முதன்மைத்தேர்வு பிப்ரவரி 23-ம் தேதி நடைபெறும் என்றும் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டி ருக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கட்டணம் ரூ.150-ஐ செலுத் துவதுடன் இ-சேவை மையங்களில் டிசம்பர் 24 முதல் ஜனவரி 10-ம் தேதி வரை சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆர்.சுதன் அறிவித்துள்ளார். இது குறித்து சம்பந்தப்பட்ட விண்ணப் பதாரர்களுக்கு எஸ்எம்எஸ் மற்றும் இ-மெயில் மூலமாக மட்டும்தகவல் தெரிவிக்கப்படும். தபால் மூலம் தகவல்எதுவும் அனுப்பப்படாது என்றும் அவர் கூறியுள்ளார்.

முதல்நிலைத்தேர்வு ‘‘அப்ஜெக் டிவ்’’ முறையில் நடத்தப்பட்டுள்ள நிலையில் முதன்மைத்தேர்வானது விரிவாக விடையளிக்கும்வகை யில் அமைந்திருக்கும். அதில் தேர்ச்சி பெறுவோர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். இறுதியாக, முதன்மைத்தேர்வுமதிப்பெண், நேர்முகத்தேர்வு மதிப்பெண், இடஒதுக்கீடு ஆகிய வற்றின் அடிப்படையில் பணிநியமனம் நடைபெறும்.

Post Top Ad