பள்ளியில் 3 மணி நேர மனித உழைப்புக்கு புல் ஸ்டாப்..! பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் அடுத்த அதிரடி...! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, December 12, 2018

பள்ளியில் 3 மணி நேர மனித உழைப்புக்கு புல் ஸ்டாப்..! பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் அடுத்த அதிரடி...!






செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்துடன் கூடிய மாணவர் வருகை பதிவு தொடக்க விழாவை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். சென்னையில் அரசு பள்ளி ஒன்றில் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்துடன் கூடிய மாணவர் வருகை பதிவை தொடங்கி வைத்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், முதலில் இந்த திட்டம் இந்த பள்ளியில் தொடங்கப்பட்டு உள்ளது.
நாளடைவில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நடை முறைப்படுத்த திட்டம் தீட்டி உள்ளதாக தெரிவித்தார். இதன் மூலம், ஓவ்வொரு பள்ளியிலும் மூன்று மணி நேர மனித உழைப்பு மிச்சப்படுகிறது. ஆசிரியர்களின் மனித உழைப்பும் மிச்சப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மாணவிகள் பள்ளிக்கு வருகை புரிந்த நேரமும், பள்ளி நேரம் முடிந்து பள்ளியிலிருந்து வெளியேறிய நேரமும் புகைப்படத்துடன் பதிவு செய்யப்படுகிறது. வருகை புரியாத போதும் மாணவிகளின் பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். இதனால் மாணவிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. மாணவிகள் குறித்த தகவல்கள் அனைத்தும் school management system இல் பதிவேற்றப்படுகிறது.

இதனால் மாணவிகளின் வருகைப்பதிவு, மட்டுமல்லாமல் கல்வித்திறன் சார்ந்த விவரங்களும் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் செயல்பாடுகள் குறித்த விவரங்கள் தமைமை ஆசிரியர் மற்றும் ஆசியர்களால் தொடர்ந்து கண்காணிக்க வசதி செய்யப்படுகிறது. எனவே இனி வரும் காலங்களில், இணையதளம் வாயிலாகவே தங்கள் குழந்தைகளின் முன்னேற்றம் குறித்த தகவல்களை பெற்றோர்கள் அறிய வைக்கப்படும்.

Post Top Ad