2012&13&14 TET ல் தேர்ச்சி பெற்றவர்களது பணிநியமனத்தில் முறைகேடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பாணை குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி வழக்கு ! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, December 15, 2018

2012&13&14 TET ல் தேர்ச்சி பெற்றவர்களது பணிநியமனத்தில் முறைகேடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பாணை குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி வழக்கு !


2012&13&14 ஆசிரியர் தகுதிதேர்வு தேர்வு தேர்ச்சி பெற்றவர்களின் பணி நியமனத்தில் முறைகேடு. மேலும் குறிப்பாக 2017 ஆண்டு வெளியிடபட்ட 1114 பணியிடங்கள் நிரப்ப வெளியிடபட்ட இறுதிபட்டியலில் தேர்வு வாரியத்தால் நிராகரிக்கபட்ட பலர் தற்போது பணிபுரிகின்றனர். இந்த அறிவிப்பாணையில் பல்வேறு முறைகேடுகளை ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட்டது.

14/12/2018 அன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர்கள் திரு.K.Kசசிதரன்
P.D ஆதிகேசவலு
முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 
வழக்கறிஞர் S.Sதேசிகன்  வாதாடினார். 
 இந்த வழக்கில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர், ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குனர் ஆகியோருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நோட்டீஸ் அனுப்பியது. 


மேலும் 2013 ஆசிரியர் தகுதிதேர்வில்  தேர்ச்சி பெற்ற நலசங்கத்தின் மாநில தலைவர் இளங்கோவன் என்பவர் தொடர்ந்த இந்த வழக்கு விசாரணையை ஜனவரி 7ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இது குறித்து வழக்கு தொடர்ந்த இளங்கோவனிடம் கேட்ட போது ஆசிரியர் தேர்வுவாரிம் தொடர்ந்து   முறைகேட்டில் ஈடுபட்டு வருவது அனைவரும் அறிந்தது. இவ்வழக்கில்  முறைகேடு சார்ந்த 52 ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாகவும் மேலும் ஆசிரியர்  முறைகேடு சார்ந்த கூடுதல்  ஆவணங்கள் , ஆதாரங்கள் இருப்பின் ஆசிரியர் பெருமக்கள் அளித்தால் முறைகேடுகளை முற்றிலுமாக களையலாம், சம்மந்தபட்ட அத்துணை பேர்மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க இயலும் என தெரிவித்தார். தொடர்பு எண்கள் 9994994339

Post Top Ad