Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
Send Your Study Materials, TLM, Videos, Articles To Aitpervai@gmail.com - www.asiriyar.net செய்திகளை WhatsApp -ல் பெற 9597063944, 7200511868 எண்களில் எதாவது ஒரு எண்னை நீங்கள் Admin - ஆக உள்ள குரூப்பில் இணைக்கவும்

Search This Blog

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 17.12.18


திருக்குறள்


அதிகாரம்:
அடக்கம் உடைமை

திருக்குறள்:121

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.

விளக்கம்:
அடக்கம் அழியாத புகழைக் கொடுக்கும். அடங்காமை வாழ்வையே இருளாக்கி விடும்.

பழமொழி

A contented mind is continual feast.

போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.

இரண்டொழுக்க பண்புகள்

* என் தேர்வுக்கான பாடங்களை நல்ல முறையில் படித்திடுவேன்.

* நான் என் தேர்வுகளை நேர்மையான முறையில் எழுதிடுவேன்.


பொன்மொழி

அறிவின் துணையோடு ஓய்வின்றி தொழிலில் பாடுபட்டால் எல்லையற்ற இன்பம் உண்டாகும்.

    - பாரதியார்

பொதுஅறிவு

1.தமிழ்நாட்டின் மாநில மரம் எது?

 பனைமரம்

2. தமிழ்நாட்டின் மாநில பழம் எது?

 பலாப்பழம்

தினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்

அன்னாசிப் பழம்
1. அன்னாசியில் மாங்கனீஸ் உள்ளிட்ட சத்துக்கள் நிறைய உள்ளன. சமீபத்திய ஆய்வுகளில் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. அன்னாசி பெரும்பாலும் வெப்பமான பகுதிகளில் பயிரிடப்படுகிறது.


2. புரதத்தை செரிக்கக் கூடிய புரோமலைன் என்ற என்சைம் இதில் அதிகம் உள்ளது. இது ரத்தம் உறையாமல் பாதுகாக்கிறது. வைட்டமின் சி சத்தும் அன்னாசியில் அதிகம் உள்ளது.

3. இதய நோய்கள் மற்றும் மாரடைப்பில் இருந்து பாதுகாப்பளிக்கிறது. இப்பழத்தில் உள்ள இதர பிற வைட்டமின்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

4. அன்னாசி பழம் சாப்பிடுவதால் காது மற்றும் சளித்தொல்லை, ப்ளூ காய்ச்சல் உள்ளிட்டவற்றில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கும். இப்பழத்தில் உள்ள மாங்கனீஸ் உடலில் ஆன்டி ஆக்சிடன்ட்களின் சக்தியை அதிகரிக்கும்.

5. மேலும் இதில் உள்ள தையாமின் மற்றும் வைட்டமின் பி சத்து, உடலில் உள்ள சுரப்பிகளின் செயல்பாட்டை சீராக்குகிறது. இதனால் உடலுக்கு அதிக சக்தி கிடைக்கிறது.

6. இது சோர்வின்றி செயல்பட ஏதுவாகிறது. உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள அன்னாசி நிறைய சாப்பிடலாம்.

English words and Meaning

Alley                சந்து
Avenue           மரங்கள் அடர்ந்த சாலை
Balcony.         முகப்பு
Beam.             உத்திரம்
Cabin.             சிறுஅறை

அறிவியல் விந்தை

*உலர் பனிக்கட்டி எனப்படும் திண்ம கார்பன் டை ஆக்சைடு பார்ப்பதற்கு சாதாரண ஐஸ் கட்டி போலவே காணப்படும்.

* இதை நாம் ஒரு ஸ்பூன் இல் வைத்தால் இது ஆவியாகும்.
 அப்பொழுது அதை காணும் போது ஸ்பூன் பாடுவது போல இருக்கும்.

* இதை தண்ணீரில் போட்டால் தண்ணீர் கொதிப்பது போல தோன்றும்.

* குளிர் சாதன பெட்டியில் வைக்காமல் உணவை இந்த உலர் பனிக்கட்டி மூலம் பாதுகாக்கலாம்.

நீதிக்கதை


*சைமனுக்கு கிடைத்த விண்வீழ்கல் - விழியன்*

மூன்றாவது வரிசையில் இருந்து சத்தம் வந்துகொண்டே இருந்தது. “தம்பிங்களா, அதென்ன சத்தம்? வகுப்பை கவனிங்க” என்றார்
அறிவியல் ஆசிரியர். “சார், சைமன் ஒரு விண்கல் எடுத்துட்டு வந்திருக்கான் சார். எங்களுக்கு பயமா இருக்கு” என்றான் மூன்றாம்
வரிசையில் இருந்த ஒல்லியான மாணவன். கொஞ்ச நேரத்தில் ஆசிரியர் மேஜை மீது அந்த வெள்ளை பை வைக்கப்பட்டது. அதற்குள்ளே
தான் அந்த விண்கல் இருந்தது.

சைமன் நடந்ததை வகுப்பின் மேடையில் நின்று விவரித்தான். “சார், நேற்று டிசம்பர் 13 இரவு வானத்தில் விண்கல் மழை பார்க்கலாம்
என்றார் அப்பா. அம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னு மொட்டைமாடிக்கு வரல. நான், அப்பா, அக்கா மூனு பேரும் மொட்டை மாடிக்கு 12
மணிக்கு கால்மணி நேரம் முன்னாடி போயிட்டோம். கொஞ்சம் மேகக்கூட்டம் இருந்தது. அப்பா ஒரு எட்டு வருஷம் முன்னாடி ரொம்ப
பிரமாதமான இரவுக்காட்சியை பார்த்திருக்கார் போல.

வானத்தில அப்படி ஒரு காட்சியை பார்த்ததே இல்லைன்னு சொன்னாரு. நானும் அக்காவும் முகத்துல துண்டு கட்டிகிட்டு அன்னாந்து படுத்துகிட்டோம். போர்வையும் தான். செம குளிர் வேற. சரியா 12.30 மணியில் இருந்து அங்கொரு மழை இங்கொரு மழையா பார்த்தோம். ப்பா..செம செம. திடீர்னு சர்ர்ர்ர்ன்னு கீழ ஒரு வெளிச்சம் வரும். சில
நொடிகள் தான். 1.30 மணிக்கு கீழ வந்துட்டோம். மேகம் மறைச்சிடுச்சு. காலையில மாடியில போய் உட்கார்ந்து படிக்கலாம்னு போனா
இந்த கல்லை நாங்க படுத்து இருந்த இடத்தில பார்த்தேன். நிச்சயம் விண்கல் தான்”

வகுப்பே பரபரப்பானது. விண்கல் விவரங்கள் குறித்து மாணவர்கள் விடாத கேள்வி கேட்டார்கள். அறிவியல் ஆசிரியர் கரும்பலகையில்
படம் வரைந்து விண்கற்கள் பற்றி விளக்கினார். பூமியின் சுற்றுப்பாதை, வால்நட்சத்திரத்தின் சுற்றுப்பாதை, விண்கல் அந்தரத்தில்
மிதப்பது என்று அவர்கள் வகுப்பில் இருக்கும் அளவிற்கு விளக்கினார். நடத்த நடத்த கேள்விகள் எழுந்துகொண்டே இருந்தது.

“பூமியில் விழுந்த மிகப்பெரிய விண்கல் என்றால் எது?”

“அந்த கல் உடைக்க முடியுமா?”


“இந்தக் கல்லை வைத்து வீடு கட்ட முடியுமா?”

“உடைத்து உட்டைக்கல் விளையாட முடியுமா?”

“அது சுடுமா?”

“தண்ணீரில் கரையுமா?”

“வால்நட்சத்திரம் சூரியனில் மோதினால் சூரியன் வெடிச்சிடுமா?”

மதிய உணவு இடைவேளையின் போது மற்ற வகுப்பு நண்பர்கள் வந்துவிட்டார்கள். ஆனால் யாரும் அந்த கல் அருகே செல்லவில்லை.
கொஞ்சம் பயந்தார்கள். “போலிஸ்கிட்ட கொடுத்திடலாம்டா, நாளைக்கு வந்து பிடிச்சிட்டு போயிட்டா” என்றபோது தான் சைமனுக்கு
பயம் தட்டியது. மதியம் நடந்த ஓவிய வகுப்பில் எல்லோருமே விதவிதமான விண்கல்லினை வரைந்தார்கள். அது பூமியில் விழுந்தால்
எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து வரையத் துவங்கினார்கள். வகுப்பின் இறுதியில் ஓவிய ஆசிரியர் “அடேய் பசங்களா, என்
இத்தனை வருட அனுபவத்தில் இந்த வகுப்பு மாதிரி நிறைவான ஓவிய வகுப்பு அமையவில்லை. சந்தோஷ்ம்” எனக்கிளம்பினார்.

ஆனாலும் சைமனுக்கும் அவன் நண்பர்களுக்கும் பயம் குறையவில்லை. ஒர்வேளை போலிஸ் வருமோ? “என் வீட்டு மாடியில
விழுந்ததுன்னா எனக்குத்தானே சொந்தம்னு” யோசித்துப்பார்த்தான். இன்று தமிழ் வகுப்பு இல்லை ஆனாலும் தமிழ் ஆசிரியர் வந்தார்.
“என்ன தம்பிங்களா எதோ கல் கிடைச்சிருக்காமே காட்டுங்க” என்றார். மேஜையில் இருந்த வெள்ளை பையினைக் காட்டினார்கள்.

“இதுக்கு ரொம்ப நல்ல தமிழ் பெயர் இருக்கு தெரியுமா விண்வீழ்கல். நல்லா இருக்குல்ல” எனக் கிளம்பிவிட்டார்.

விளையாட்டு நேரத்தில் ஏழு கற்கள் விளையாடினார்கள். “சைமன், அந்த கல்லை வெச்சி விளையாட்டு விளையாடுவோமா” என
கிண்டலடித்துச் சென்றார்கள் அவன் வகுப்புத் தோழிகள்.

பள்ளி முடிவதற்குள் அவன் பள்ளி முழுவதும் கிட்டத்தட்ட விண்கல்லினைப் பார்த்துவிட்டது. “காலையில பார்த்ததுக்கு இப்ப அளவு
குறைஞ்சிடுச்சு சைமன்” என்றனர் அவன் நண்பர்கள். ஒருவித பெருமிதம் ஒருபக்கம் இருந்தாலும் பயமும் ஒருபக்கம் இருந்தது. பள்ளி
மைதானத்தில் இருந்து கிளம்பும்போது நூலகரும் அவர் உதவியாளரும் பேசிக்கொண்டு சென்றார்கள் “என்னப்பா இன்னைக்கு ஒரே
நாள்ல இவ்வளவு பசங்க நிறைய அறிவியல் புத்தகமா எடுத்துகிட்டு போனாங்க. அதுவும் இல்லாம எல்லாமே விண்வெளி புத்தகங்கள்”.


வீட்டினை அடைந்தபோது அவன் அக்கா குழலி அழுதுகொண்டிருந்தாள். பையினை வைத்துவிட்டு ஆடைகளை மாற்றிவிட்டு தன் பகுதி
நண்பர்களுக்கு விண்கல்லை காட்டவேண்டும் என எண்ணியபடி முகம் கழுவினான். “என்னம்மா அக்கா அழுவுறா?” என அம்மாவிடம்
மாலை டிபனை சாப்பிட்டபடி கேட்டான். “அதுவா? அவ மூனு நாளா ஸ்கூல் ப்ராஜக்ட் ஒன்னு செய்திருக்கா. அதை காணமாம்”.

“ஓ என்ன பிராஜக்ட்?”

“மாடியில கல்ல காய வெச்சிருக்கா, சாய்ந்திரம் வந்து பார்த்தா காணோமாம். எதோ விண்கல்லாம்”

“ஆ...!”

( பரவாயில்லை அக்கா கொண்டு சென்றிருந்தால் அக்காவுக்கு மதிப்பெண் மட்டுமே கிடைத்திருக்கும்... ஆனால் இந்த கல் மூலம் இன்று எங்கள் பள்ளியே பல விஷயங்களை கற்றுகொண்டது.... என நினைத்து கொண்டு தன் அக்காவிடம் மன்னிப்பு கேட்டு அந்த கல்லை ஒப்படைத்தான்.)

- விழியன்
14-12-2018

இன்றைய செய்திகள்

17.12.2018

* தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சனிக்கிழமை மாலை வலுவடைந்து, புயலாக உருவானது.  இந்த புயலுக்கு "பெய்ட்டி'  என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் வருகிற ஜனவரி 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் தடை முழுமையாக அமலுக்கு வருகிறது. மருந்துகள், பால், குடிநீர் மற்றும் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளித்து பிளாஸ்டிக் தடையை கட்டாயம் அமல்படுத்த அனைத்து உள் ளாட்சி அமைப்புகளுக்கும் உத்தர விடப்பட்டுள்ளது.


* 10, பிளஸ் 2 மாணவர்களின் நுண்ணறிவை சோதிக்கும் வகையில் பொதுத்தேர்வு: வினாத்தாள்களை இறுதிசெய்யும் பணிகள் தீவிரம்

* உலக டூர் ஃபைனல்ஸ் பேட்மிண்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பி.வி.சிந்து பெற்றுள்ளார்

* இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான  2-ஆவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 175 ரன்கள் முன்னிலையுடன் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்துள்ளது.

Today's Headlines

* The deep atmospheric inferior zone in the south-east coast was strong and became a storm on Saturday evening. The storm is named "Paiti".

* Plastic bans will be fully effective on January 1, coming in Tamil Nadu. All intrusion organizations have been ordered to implement the plastic barrier by exempting only the essential items including medicines, milk, drinking water and oil.

* General examination question papers is on progress to check the intelligence of 10th and plus 2 students:

* P V Sindhu holds the status of the first Indian woman to win the championship in World Tour Finals Badminton Series

* Australia scored 132 runs for the loss of 4 wickets with 175 runs ahead at the end of the 3rd day of the 2nd Test between India and Australia.

Prepared by
Covai women ICT_போதிமரம்

More

 

Sidebar One

தமிழ்நாடு வேலைவாய்ப்பு செய்திகள்