Write Protected-ஆன Transcend Pendrive-ஐ மீண்டும் செயல் பட வைப்பது எப்படி? - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, November 4, 2018

Write Protected-ஆன Transcend Pendrive-ஐ மீண்டும் செயல் பட வைப்பது எப்படி?






நன்றாக செயல்பட்டு கொண்டிருக்கும் நமது Pendrive, சில
நேரங்களில் Your Pendrive is write protected என்ற பிழை செய்தி
தோன்றும் அதன் பின்னர் நமது Pendrive செயலிழந்துவிடும்,



இனி இப்படி நிகழ்ந்தால் நீங்கள் கவலைப்படத் தேவை
இல்லை, இந்த பிரச்சனையை சரி செய்வது மிகவும் எளிது,
அதன் வழிமுறைகளை இனி காண்போம்:

உங்கள் Transcend Pendrive-ல் write protection-ஐ நீக்க, Transcend
நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள JetFlash Online Recovery Tool
எனும் மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ள
வேண்டும்.

மென்பொருளை தரவிறக்கம் செய்ய https://www.transcend-
info.com/Support/Software-3/ என்ற இணையதள முகவரியில் சென்று
தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

Write Protected-ஆன Pendrive- ஐ உங்கள் கணினியில்
இணைக்கவும், அதன் பின்னர் நீங்கள் தரவிறக்கம் செய்த

JetFlash Online Recovery Tool மென்பொருளை இயக்குங்கள், Start-
கொடுத்ததும் Write Protection ஐ நீக்க தொடங்கும்,
இறுதியில், உங்கள் Pendrive-ஐ நீக்கிவிட்டு மீண்டும்
இணைக்கும் படி ஒரு செய்தி தோன்றும்,

அதன் பின்னர் உங்களது Pendrive-ஐ கணினியில் இருந்து நீக்கிவிட்டு மீண்டும் கணினியில் இணைக்கவும், தற்போது உங்களது Write Protection-நீக்கப்பட்டு இருக்கும், வழக்கம் போல் உங்கள் Pendrive- ஐ
செயல் படத் தொடங்கும்.

குறிப்பு: இந்த மென்பொருள் Windows 7 மற்றும் அதற்கு
பின்னர் வெளியிடப்பட்ட இயங்குதளங்களில் மட்டுமே
இயங்கும், மேலும் இந்த மென்பொருளை இயக்க இணையதள
வசதி இன்றிமையாதது ஆகும்.

Post Top Ad