Science Fact - வண்ணத் தூரிகையின் (paint brush) இழைகள் நீருக்கு வெளியே ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டும், நீரினுள் ஒன்றோடொன்று ஒட்டாமல் பிரிந்தும் இருப்பதும் ஏன் ? - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, November 8, 2018

Science Fact - வண்ணத் தூரிகையின் (paint brush) இழைகள் நீருக்கு வெளியே ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டும், நீரினுள் ஒன்றோடொன்று ஒட்டாமல் பிரிந்தும் இருப்பதும் ஏன் ?


வண்ணத்தூரிகையிலுள்ள இழைகளின் அடர்த்தியும் (density), நீரின் அடர்த்தியும் ஏறக்குறைய சமமாகும். எனவே தூரிகையை நீரினுள் வைத்திருக்கும்போது நீரின் மிதப்பாற்றல் (buyoncy) காரணமாக தூரிகையின் இழைகள் மேலெழும்புகின்றன. 

இதன் விளைவாக இழைகள் தனித்தனியே பிரிந்து நிற்கும். தண்ணீரால் நனைக்கப்பெற்ற நிலையில், தூரிகையை நீருக்கு வெளியே எடுக்கும்போது இழைகளின் மூலக்கூறுகளுக்கும் (molecules) தண்ணீரின் மூலக்கூறுகளுக்கும் இடையே உண்டாகும் ஒட்டுவிசையின் (cohesive force) காரணமாக இழைகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டு பிரியாமல் இருக்கும்.

Post Top Ad