NEET - நுழைவு தேர்வு பதிவு துவங்கியது - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, November 1, 2018

NEET - நுழைவு தேர்வு பதிவு துவங்கியது



பிளஸ் 2 மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர்வதற்கான, 'நீட்' நுழைவு தேர்வுக்கான, 'ஆன்லைன்' பதிவு, நேற்று நள்ளிரவில் துவங்கியது.பிளஸ் 2 அறிவியல் பிரிவில் படிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மற்றும் இந்திய மருத்துவ படிப்பில் சேர்வதற்கு, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.இந்த நுழைவு தேர்வை, மருத்துவ கவுன்சில் சார்பில், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்தியது.

இந்த ஆண்டு முதல், தேசிய தேர்வு முகமையான, என்.டி.ஏ., நடத்துகிறது. நீட் தேர்வுக்கான அட்டவணை, என்.டி.ஏ., சார்பில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.மே, 5ல், நாடு முழுவதும், நீட் தேர்வு நடக்க உள்ளது. தேர்வு முடிவுகள், ஜூன், 5ல் வெளியாகும். இந்த முறை, தமிழ் உட்பட, 10க்கும் மேற்பட்ட, மாநில மொழிகளில், வினாத்தாள் தயாரிக்கப்படுகிறது.இந்நிலையில், தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு, நேற்று நள்ளிரவு, 12:00 மணிக்கு மேல் துவங்கியது.

என்.டி.ஏ.,வின், www.nta.ac.in என்ற இணையதளத்தில், வரும், 30ம் தேதி வரை பதிவு செய்யலாம்.மாணவர்களின் வசதிக்காக, நாடு முழுவதும், 2,697 பள்ளிகளில், தேர்வு உதவி மற்றும் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நீட் தேர்வு எழுதுவதற்கு, 'ஆதார்' கட்டாயம் இல்லை என, அறிவிக்கப்பட்டுள்ளது.நீட் தேர்வில், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில், வினாத்தாள் தயாரிக்கப்பட்டாலும், அவற்றில், மொழி மாற்ற பிழைகள் இருந்தால், ஆங்கிலத்தில் உள்ள வினாத்தாளின் அடிப்படையிலேயே, பதில் எழுத வேண்டும். அதன் அடிப்படையிலேயே விடை திருத்தம் செய்யப்படும் என, மத்திய மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது

Post Top Ad