ஆன்லைன் பரிவர்த்தனைக்கு உஷார் டிப்ஸ்... - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, November 26, 2018

ஆன்லைன் பரிவர்த்தனைக்கு உஷார் டிப்ஸ்...





ஆன்லைன் மூலம் இணைய வங்கி பயன்படுத்தி பணம் அனுப்புகின்றனர். இது தவிர, ஆன்லைனில் ஷாப்பி–்ங் செய்வது அதிகரித்து வருகிறது. இணைய திருடர்களிடம் இருந்து பாதுகாக்க இதோ சில டிப்ஸ்...

* ஆன்லைனில் பரிவர்த்தனை செய்யும்போது, நம்பிக்கைக்கு உரிய இணையதளத்தை பயன்படுத்தவும். முன்பின் தெரியாத, புதிய இணைய தளங்களில் பொருட்கள் வாங்குவது ஏமாற்றத்துக்கு வழி வகுக்கும். பாதுகாப்பான பரிவர்த்தனைக்கும் உத்தரவாதம் இருக்காது.
* இணைய வங்கிச்சேவை பயன்படுத்துபவர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் பாஸ்வேர்ட் மாற்றவும். பரிவர்த்தனைக்கு பிறகு வங்கிகளில் இருந்து வரும் எஸ்எம்எஸ்களை பார்த்து உறுதி செய்யவும்.
* மோசடி இ-மெயில்களை நம்பி ஏமாற வேண்டாம். கிரெடிட் கார்டு அல்லது டெபிட்கார்டு, வங்கி கணக்கு விவரங்களை யாருக்கும் பகிர வேண்டாம்.
* ஆன்லைனில் பொருட்கள் வாங்க ஒரே டெபிட் கார்டை பயன்படுத்தவும். பிரீபெய்டு கார்டுகளும் வந்து விட்டன.
* இணையதள முகவரியில் https என தொடங்குகிறதா என பார்க்கவும். S இல்லாத இணையதளங்கள் ஆபத்து.
* பொது வை-பை பயன்படுத்தி எந்த பரிவர்த்தனையும் செய்ய வேண்டாம்.
* மூன்றாம் நபர் பேமன்ட் முறையில் பணம் செலுத்துவதற்கு முன்பு, ‘வெரிசைன்’ போன்ற லோகோவை பார்க்கலாம். அதை கிளிக் செய்து இணைய சான்றை அறிந்து கொள்ளவும்.
* கம்ப்யூட்டர் கீ போர்டு பயன்படுத்துவதை விட, வங்கிகள் அல்லது பேமன்ட் நிறுவனங்களின் விர்ச்சுவல் கீபோர்டு பயன்படுத்தவும்.
* பயர்பாக்ஸ், குரோம் என எந்த பிரவுசரை பயன்படுத்தினாலும், அதில் உள்ள ‘பிரைவேட் டேப்’ தேர்வு செய்து பயன்படுத்தவும். இவ்வாறு செய்தால் உங்கள் இணைய செயல்பாடுகள் பதிவாகாமல் தடுக்கலாம்.
* வங்கி, ஷாப்பிங் உட்பட எந்த இணையதளமாக இருந்தாலும் அதில் உள்ளீடு செய்த பிறகு மறக்காமல் ‘லாக் அவுட்’ கிளிக் செய்து வெளியேறவும். வெறுமனே பிரவுசரை மூட வேண்டாம்.

Post Top Ad