மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்:தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, November 1, 2018

மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்:தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு


தீபாவளி நாளில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்புடன் பட்டாசு  வெடிப்பது எப்படி என்று பள்ளித் தலைமை ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கும்போது மாணவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.  விபத்துகள் அற்றதாக இருக்க வேண்டும் என்றும் பள்ளி மாணவ, மாணவியருக்கு அறிவுறுத்தும் வகையில்   மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: 

* பட்டாசு வெடிக்கும்போது தளர்வான ஆடைகள் உடுத்துவதை தவிர்க வேண்டும். டெரிகாட்டன், டெரின் ஆகிய எளிதில் தீ பற்றக்கூடிய ஆடைகளை அணியக்கூடாது.* பட்டாசுகளை கொளுத்தி கையில் வைத்துக்கொண்டு வெடிக்கக் கூடாது. 

* குடிசைகள் உள்ள பகுதிகளில் ராக்கெட்டுகளை வெடிக்காமல் வெட்டவெளிப் பகுதியில் வெடிக்க வேண்டும். * கூட்டமான பகுதி, தெருக்களில் வெடிக்காதீர். பட்டாசு விற்பனை செய்யும் கடையின் முன்பும், அருகிலும் வெடிக்கக் கூடாது.

* பெற்றோர் பாதுகாப்பு அல்லது அவர்கள் முன்னிலையில் தான் குழந்தைகள் பட்டாசு வெடிக்க வேண்டும். 


* மருத்துவமனை அருகில், பெட்ரோல் சேமிப்பு இடங்கள் அருகில் வெடிக்க கூடாது. 

* அதிக ஓசையுள்ள பட்டாசுகளை வெடிக்க வேண்டாம். அது காதுக்கு பாதிப்பு ஏற்படுத்தலாம். 

பாதுகாப்பு முறைகள் குறித்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாணவ, மாணவியருக்கு பள்ளியிலேயே வழிப்புணர்வு செயல் முறைகளை செய்து காட்ட வேண்டும். மேலும் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு  பற்றிய வகுப்புகள் நடத்துவது, தீயணைப்பு மீட்பு பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்தும் மாணவர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். மேற்கண்ட அனைத்து செயல்பாடுகளும்  தீபாவளிக்கு ஒரு வாரம் முன்னதாக மாணவர்களுக்கு விளங்க வைக்க வேண்டும். 

Post Top Ad