கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி எவ்வாறு வழங்குவது? - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, November 20, 2018

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி எவ்வாறு வழங்குவது?







கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை மறு சீரமைப்பு பணிகளை செய்திட நன்கொடைகள் மூலம் உதவிடுவதற்கான முகவரியை முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள ரூ.1,000 கோடி நிதி உடனடியாக விடுவிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று அறிவித்தார்.

புயல் பாதிப்பால் 12 மாவட்டங்களில் 88,102 ஹெக்டேர் நெல், தென்னை உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 32,706 ஹெக்டேர் நெற்பயிர்களும், 30,100 ஹெக்டேர் தென்னை மரங்களும், 7,636 ஹெக்டேர் மக்காச்சோளமும், 4, 747 ஹெக்டேர் வாழையும், 4000 ஹெக்டேர் காபி, பயறு, பருத்தி, முந்திரி, பலா மரங்களும், 3, 253 ஹெக்டேர் முந்திரி பயிர்களும், 500 ஹெக்டேர் கரும்பு பயிர்களும், 945 ஹெக்டேர் மா மரங்களும், 2,707 ஹெக்டேர் காய்கறி பயிர்களும் சேதம் அடைந்துள்ளன.

தென்னை மரத்துக்கு ரூ.600, அதை வெட்டி அகற்ற ஒரு மரத்துக்கு ரூ.500 என மொத்தம் ரூ.1,100 அளிக்கப்படும். சுமார் 175 மரங்கள் நடப்பட்டுள்ள ஒரு ஹெக்டேருக்கு ரூ.1 லட்சத்து 92 ஆயிரத்து 500 நிவாரணம் அளிக்கப்படும்.

மறுசாகுபடி செய்ய ஹெக்டேருக்கு ரூ.72 ஆயிரத்து 100 வழங்கப்படும். இதன்மூலம் நிவாரணம் மற்றும் மறுசாகுபடிக்கு தென்னை விவசாயிகள் ஹெக்டேருக்கு ரூ.2 லட்சத்து 64 ஆயிரத்து 600 பெறுவர். சொட்டு நீர்ப் பாசனத்துக்கு சிறு-குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம், மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியம் கொடுக்கப்படும்.

கஜா புயலை எதிர்கொண்டு மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக நன்கொடைகள் மூலமாக உதவ வேண்டுமென முதல்வர் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து, அவர் திங்கள்கிழமை வெளியிட்ட வேண்டுகோள் செய்தி:-

மக்கள் நலனில் அக்கறை செலுத்தும் குடிமக்கள், நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளர்கள் தமிழக அரசு எடுத்து வரும் மாபெரும் நிவாரணம் மற்றும் மறு சீரமைப்பு நடவடிக்கைகளுக்கு நன்கொடைகள் மூலம் உதவ வேண்டும். தமிழக அரசால் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண மற்றும் சீரமைப்புப் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை மறு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள நன்கொடைகள் மூலம் உதவுவதற்கான முகவரியை முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

நன்கொடையாளர்கள், https://ereceipt.tn.gov.in/cmprf/cmprf.html -இல் வங்கி, டெபிட்கார்டு, கிரெடிட் கார்டு மூலம் செலுத்தலாம்.

பொதுமக்கள் தங்களது நன்கொடையை குறுக்குகோடிட்ட காசோலை, வங்கி வரைவோலை மூலம் கீழ் வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

அரசு துணைச் செயலாளர் மற்றும் பொருளாளர், முதல்வர் பொது நிவாரண நிதி, நிதித்துறை, தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை - 600009, தமிழ்நாடு, இந்தியா
மின்னஞ்சல் முகவரி: dspaycell.findpf@tn.gov.in
Electronic Clearring System(ECS) மூலம் வங்கிக்கு நேரடியாக அனுப்ப வேண்டிய விவரம்:
வங்கி பெயர்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி.
கிளை: தலைமைச் செயலகம், சென்னை - 600009.
சேமிப்பு கணக்கு எண்: 117201000000070.
IFSC: IOBA0001172,
CMPRF PAN: AAAGC0038F

நன்கொடைகளுக்கு வருமான வரிச்சட்டம் பிரிவு 80(G) ன் கீழ் 100 சதவீதம் வரிவிலக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post Top Ad