நெருங்கும் 'கஜா' புயல் - மக்கள் செய்ய வேண்டியது என்ன - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, November 15, 2018

நெருங்கும் 'கஜா' புயல் - மக்கள் செய்ய வேண்டியது என்ன


‘கஜா’ புயல் நெருங்கிவிட்ட நிலையில் பொதுமக்கள்
எதை செய்ய வேண்டும் ? எதை செய்ய கூடாது? என்ற விரிவான அறிவுரைகளை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ளது.

புயல் தொடர்பான அரசின் அதிகாரபூர்வ செய்திகளை டிவி, நாளிதழ்கள் உள்ளிட்ட ஊடகங்கள் மூலம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும், வதந்திகளை நம்பக் கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

செல்போன்களை அடிக்கடி சார்ஜ் செய்து வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. முக்கிய ஆவணங்கள், சான்றிதழ்கள், பொருட்கள் ஆகியவற்றை வெள்ள நீர் புகாத இடத்தில் பத்திரப்படுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. பூனை, நாய் உள்ளிட்ட செல்லப்பிராணிகளை கட்டி வைக்க கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


புயல் அடிக்கத் தொடங்கியவுடன் மின்சார இணைப்பை முற்றிலும் துண்டிப்பதுடன், சமையல் எரிவாயு சிலிண்டரையும் மூடிவைக்கவேண்டும். பள்ளமான, பாதுகாப்பற்ற இடத்தில் வீடு இருந்தால் பாதுகாப்பான வேறு இடத்திற்குச் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. புயலின்போது வெளியே இருக்க நேரிடும் பட்சத்தில் பாதுகாப்பான இடம் அருகில் இருக்கிறதா என அறிந்து அங்கு செல்லவேண்டும்.

சேதமடைந்த கட்டடங்கள், மரம், மின் கம்பங்கள் அருகில் நிற்க கூடாது. மேலும் சாலையில் மின் கம்பிகள் அறுந்து விழுந்திருக்கிறதா என்பதை கவனித்து அதன் பின்பே மேற்கொண்டு செல்ல வேண்டும். புயலின் போது மீனவர்கள் கடலுக்கு செல்லக் கூடாது என பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

Post Top Ad