ஆன்லைனில் அடிக்கடி பணம் அனுப்புபவரா நீங்கள்? வங்கிகள் உங்களிடம் வசூலிக்கும் கட்டணம் எவ்வளவு? - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, November 25, 2018

ஆன்லைனில் அடிக்கடி பணம் அனுப்புபவரா நீங்கள்? வங்கிகள் உங்களிடம் வசூலிக்கும் கட்டணம் எவ்வளவு?





ஆன்லைனில் அடிக்கடி பணம் அனுப்புபவரா நீங்கள்? வங்கிகள் உங்களிடம் வசூலிக்கும் கட்டணம் எவ்வளவு?
இன்றைய அவசர உலகில் ஆன்லைன் ட்ரான்சேக்‌ஷன் முறை அதிகப்படியான மக்களால் பயன்படுத்தப்படும் ஒன்று. முன்பெல்லாம் உறவினருக்கோ, நண்பர்களுக்கோ அல்லது தமக்கே தேவை என்றாலும் ஒரு அக்கவுண்ட்லிருந்து மற்றொரு அக்கவுண்டுக்கு பணத்தை அனுப்ப நிறைய மெனக்கெட வேண்டும்.

ஆன்லைன் பணப்பரிவர்த்தனை:
வங்கிகளுக்கு நேரில் சென்று பணத்தை பிரித்து அனுப்பி வைக்க வேண்டும். ஆனால் அந்த தொல்லை இப்போது இல்லை. இருந்த இடத்தில் இருந்துக் கொண்டே எந்த அக்கவுண்டுக்கு வேண்டுமென்றாலும் பணத்தை அனுப்பி வைக்கலாம். பாதுகாப்பான ஆன்லைன் ட்ரான்சேக்‌ஷன் முறைகள் பல இப்போது அறிமுகப்படுத்தப்பட்டு விட்டன.


இதில், ஆர்.டி.ஜி.எஸ், ஐ.எம்.பி.எஸ் மற்றும் நெஃப்ட் முறைகளும் உள்ளது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. சரி நீங்கள் இந்த ஆப்ஷன்களில் பணத்தை அனுப்பும் போது, வங்கிகள் உங்களிடம் எவ்வளவு கட்டணம் வசூல் செய்கின்றன என்பது உங்களுக்கு தெரியுமா?

மேலும் படிக்க… எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு செம சான்ஸ்

எஸ்பிஐ வங்கி:
எஸ்பிஐ வங்கியில் 10 ஆயிரம் ரூபாய் வரையிலான நெஃப்ட் பரிவர்த்தனைகளுக்கு எஸ்.பி.ஐ 1 ரூபாய் + ஜி.எஸ்.டியோடு கட்டணம் வசூலிக்கிறது. 10,000 முதல் 1 லட்சம் வரை 2 ரூபாய் + ஜி.எஸ்.டி கட்டண தொகையை வசூல் செய்கிறது.

2 -5 லட்சம் ரூபாய் வரையிலான ஆர்.டி.ஜி.எஸ் பர்வர்த்தனைகளில்,5 ரூபாயும், அதற்கு மேல் 10 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 1000 ரூபாய் வரையிலான ஐ.எம்.பி.எஸ் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் ஏதும் இல்லை.

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி:
10 ஆயிரம் ரூபாய் வரை நெஃப்ட் பரிவர்த்தனை செய்ய 2.5 ரூபாய் + ஜி.எஸ். டி கட்டணம். 10 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை 5 ரூபாய் + ஜி.எஸ்.டி கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

1 லட்சம் முதல் 2 லட்சம் வரை பணப்பரிவர்த்தனைக்கு 15 ரூபாய் + ஜி.எஸ்.டி கட்டணம், அதற்கு மேல், 10 லட்சம் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு 25 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

ஆர்.டி.ஜி.எஸ் பொருத்தவரை 25+ஜி.எஸ்.டி கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 5-10 லட்சம் வரை 50 ரூபாய் + ஜி.எஸ்.டி வசூலிக்கப்படுகிறது.ஒரு லட்சம் வரையிலான ஐ.எம்.பி.எஸ் பரிவர்த்தனைக்கு 5 ரூபாய் + ஜி.எஸ்.டி வசூல் செய்யப்படுகிறது. ஒரு லட்சம் முதல் 2 லட்சம் வரை 15 ரூபாயும், ஜி.எஸ்.டியும் கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது.

Post Top Ad