அரசுப்பள்ளிக்கு அங்கீகாரம்: ரூ.50 லட்சத்தில் முன் மாதிரி பள்ளியாக உயர்கிறது!!! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, November 7, 2018

அரசுப்பள்ளிக்கு அங்கீகாரம்: ரூ.50 லட்சத்தில் முன் மாதிரி பள்ளியாக உயர்கிறது!!!







கோவை மாவட்டத்தில், அசோகபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு,
முன்மாதிரி பள்ளி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.


பள்ளிக்கல்வித்துறையின் கீழ், மாவட்டத்துக்கு ஒரு அரசுப்பள்ளியில், கட்டமைப்பு வசதிகளை தன்னிறைவாக்கி, முன்மாதிரி பள்ளியாக மாற்றப்படும் என, சட்டசபையில் விதி 110ன் கீழ், முதல்வர் பழனிசாமி கடந்த ஜூனில் அறிவித்தார்.இதற்கான அரசாணையும் வெளியானது

இதன்படி, கோவை மாவட்டத்தில், அசோகபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது

இப்பள்ளியில், ஆயிரத்து 428 மாணவர்கள் படிக்கின்றனர். 51 ஆசிரியர்கள் வகுப்பு கையாள்கின்றனர்

ஐந்தரை ஏக்கர் பரப்பளவு கொண்ட இப்பள்ளிக்கு, 50 லட்சம் ரூபாய் மதிப்பில், கட்டமைப்பு வசதி, கற்றல், கற்பித்தல் உபகரணங்கள் மாற்றுதல் என, தேவைக்கேற்ப வசதிகள் செய்து தரப்படவுள்ளது

*பள்ளியின் தலைமையாசிரியர் ராஜலட்சுமி கூறியதாவது

எங்கள் பள்ளியில், அதிக மாணவர்கள் படிப்பதோடு, நுாறு சதவீத தேர்ச்சி, அதிக மதிப்பெண்கள் பெறும் அரசுப்பள்ளியாக திகழ்கிறது

*மாதிரி பள்ளி திட்டத்தின் கீழ், கம்ப்யூட்டர் லேப், ஆய்வக உபகரணங்கள், நவீன ஆய்வக கட்டடம் கட்டப்படவுள்ளது. வகுப்பறைகளுக்கு டிஜிட்டல் கரும்பலகை பொருத்தப்படும். அந்தந்த பள்ளியின் தேவைக்கேற்ப செயல்திட்டங்கள் தயாரிக்கப்படுவதால், தரம் மேம்படும்,'' என்றார்

மாவட்ட கல்வி அலுவலர் (நகர்) கீதா கூறுகையில்,''முன்மாதிரி பள்ளி திட்டத்தின் மூலம், அசோகபுரம் பள்ளி, புதுப்பொலிவு பெறும். உயர்தர ஆய்வகங்கள் அமையவுள்ளதால், அறிவியல் பிரிவு மாணவர்கள், பெரிதும் பலனடைவர்,'' என்றார்

Post Top Ad